இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிகள் பாபர் அசாம் இடத்தில் இடம்பெற்ற அறிமுக வீரர் கம்ரன் குலாம் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இங்கிலாந்து அணி தற்பொழுது பாகிஸ்தானுக்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வந்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததில் உலகச் சாதனை படைத்தது. இதன் காரணமாக பாபர் அசாம் உட்பட ஐந்து முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டார்கள்.
அதே மைதானம் அதை ஆடுகளம்
இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி முதல் போட்டி நடந்த அதே முல்தான் மைதானத்தில் அதே ஆடுகளத்தில் தொடங்கியது. இந்த போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாபர் அசாம் இடத்தில் கம்ரன் குலாம் என்கின்ற புதிய வீரர் இடம் பெற்றார்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 28 பந்தில் 7 ரன்கள், கேப்டன் ஷான் மசூத் 7 பந்தில் 3 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். பாபர் அசாமும் இல்லாத நிலையில் போட்டி துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே பாகிஸ்தான் அணி நெருக்கடியில் சிக்கியது.
பாபர் அசாம் இடத்தில் வந்த அறிமுகவீரர்
இந்த நிலையில் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் மற்றும் பாபர் அசாம் இடத்திற்கு வந்த அறிமுக வீரர் கம்பீரன் குலாம் இருவரும் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். சிறப்பாக விளையாடிய இந்த இருவரும் அரை சதம் தாண்டினார்கள்.
இந்த ஜோடியில் சையும் அயூப் 160 பந்தில் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 278 பந்துகளில் 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் அணியை மீட்டது. இதற்கு அடுத்து உள்ளே வந்த துணை கேப்டன் சவுத் ஷகீல் 14 பந்தில் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க : விராட் கோலி லெவல் என்ன தெரியுமா?.. பாபர் அசாமை எல்லாம் கம்பேர் பண்ணாதிங்க – அஸ்வின் கருத்து
இந்த நிலையில் அறிமுக வீரர் கம்ரன் குலாம் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டம் முடிய சிறிது நேரம் இருக்கையில் கம்ரன் குலாம் 224 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 118 ரன்கள் ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்றைய ஆட்ட நேரம் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருக்கிறது. களத்தில் முகமது ரிஸ்வான் 37, ஆகா சல்மான் 5 ரன்களுடன் இருக்கிறார்கள். ஜாக் லீச் அதிகபட்சமாக இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.