இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போனில் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிற நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஆக கருதபடுகிற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மோசமான நிலையில் உள்ளனர். விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த நிலையில் அதற்குப் பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடினார்.
ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் மிகவும் சுமாராக விளையாடி மிக சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ஆன அபிஷேக் நாயர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 25 முதல் 30 பந்துகள் விளையாடினால் அவர்கள் மீண்டும் தங்களது பழைய நிலைமையை அடைய முடியும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் ரோகித் இதை செய்யணும்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இது நம்பிக்கை மற்றும் தொடக்கம் சார்ந்த விஷயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு வீரருக்கு தொடக்கம் சரியாக அமைந்து விட்டால், அதற்குப் பிறகு அவரது ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். எனவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அந்த மாதிரியான வீரர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களால் 25 முதல் 30 பந்துகள் விளையாட முடிந்தால் நீங்கள் பழைய ரோகித் மற்றும் விராட் கோலி பார்க்க முடியும்.
இதையும் படிங்க:பும்ராவின் பந்துவீச்சை அடிக்க.. சாமின் தந்தை இப்படித்தான் அவரை தயார் செய்தார் – சகோதரர் பில்லி பேட்டி
இது ஒரு நம்பிக்கையின் விளையாட்டு நீங்கள் எவ்வளவு பயிற்சி செய்தாலும் எவ்வளவு நேர்மறையாக பேசினாலும் இறுதியாக களத்தில் எவ்வளவு நேரம் விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம். எனவே அந்த 25 முதல் 30 பந்துகள் எதிர்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய வீரர் சாம் எப்படி விளையாடினார் என்பது தெரியும். அவர் நான்கு நிலைகளில் காட்டிய அதிரடி எங்களை பின்னுக்கு தள்ளியது. எனவே ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எனவே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.






