மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இரு அணிகள் மீது இருக்கும் அழுத்தம் குறித்து பேசி இருக்கிறார்.
தற்போது பாபர் அசாம் தலைமையில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருக்கிறது. அவர்களுடைய பேட்டிங் மற்றும் பீல்டிங் எதிர்பார்த்ததைவிட மோசமடைந்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தார்கள்.
மேலும் பாகிஸ்தான் அணியில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட கூட்டணி இருக்கிறது. ஆனால் அந்தக் கூட்டணியால் கூட அமெரிக்க பேட்டிங் யூனிட்டை உடைத்து 159 ரன்களை வைத்து வெற்றி பெற முடியவில்லை. இதனால் அவர்கள் ஒரு அணியாக மொத்தமாகவே பின்தங்கி இருப்பதான தோற்றம் இருக்கிறது.
இதன் காரணமாக இந்திய அணிக்கு இந்த போட்டியில் எந்த வித அழுத்தமும் இல்லை என்றும், பாகிஸ்தான அணி அமெரிக்கா அணியிடம் தோற்று வருகின்ற காரணத்தினால் அந்த அணிக்கு தான் அதிக அழுத்தம் இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்களால் பேசப்பட்டு வருகிறது.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் நசீம் ஷா கூறும் பொழுது ” அழுத்தம் என்பது பாகிஸ்தான் அணியின் மீது மட்டும் கிடையாது, இந்திய அணியின் மீதும் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எவ்வளவு அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை நம் கண்களால் பார்க்க முடியும். இரு அணியிலும் சிறந்த வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால் அன்றைய நாளில் சிறப்பாக இருப்பது முக்கியம். இது ஒரு பந்து கூட நீங்கள் ஓய்வெடுக்க முடியாத பெரிய போட்டியாக இருக்கும்.
இதையும் படிங்க : இந்திய அணி பாகிஸ்தானை விட முன்னணியில் கிடையாது.. நாங்க இத பண்ணினா போதும் – கேரி கிரிஸ்டன் பேச்சு
மேலும் இருநாட்டு வீரர்களின் தரத்தில் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் அழுத்தமில்லை என்று யாராவது சொன்னால், நீங்கள் இருநாட்டு மக்களிடமும் போய் கேளுங்கள். இருநாட்டு ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் பெரிய அழுத்தம் இருக்கிறது. இவ்வளவு பெரிய போட்டியில் நீங்கள் அழுத்தத்தை உணரவில்லை என்றால் நீங்கள் மனிதரே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.