ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் அனைவரும் எதிர்பார்த்த பெரிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நியூயார்க் நாசாவ் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு எந்தவித அட்வான்டேஜும் இருப்பதாக நினைக்கவில்லை என பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் கூறியிருக்கிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிறிய அணியான அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி இருக்கிறது.
மேலும் போட்டி நடைபெறும் நியூயார்க் நாசாவ் மைதானம் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் புதிய மைதானமாக இருக்கிறது. இந்திய அணி இந்த மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியிலும் அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் சுற்றுப் போட்டியிலும் விளையாடியிருக்கிறது.
இது மட்டுமில்லாமல் இந்திய அணி தொடர்ந்து அங்கேயே தங்கி இருந்து அந்தச் சூழ்நிலைகளுக்கு மிகவும் நன்றாகப் பழகி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு அட்வான்டேஜ் இருப்பதாக முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள்.
இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் “இங்கு இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இருக்கின்ற காரணத்தினால் அந்த அணிக்கு அட்வான்டேஜ் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் நியூயார்க் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும். எங்களால் என்ன முடியுமோ அதை நாங்கள் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : விராட் கோலிய மட்டுமே நாங்க நம்பி இருக்கல.. ஐபிஎல்ல ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டேன் – ரோகித் சர்மா பேட்டி
எந்த ஒரு வீரரும் தோல்வியின் பக்கத்தில் இருப்பது நல்லது கிடையாது. இருப்பினும் பாகிஸ்தான் வீரர்கள் தங்களால் முடிந்ததை செய்வதற்கு மிகவும் முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரு யூனிட் ஆக விளையாடுகிறார்கள். எங்களுக்கு தனிப்பட்ட திறமைகள் வேண்டும் என்று தெரியும். ஆனால் பெரிய போட்டியில் கூட்டு முயற்சி அவசியம். எங்களிடம் நல்ல வேகம் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் அதே சமயத்தில் சுழல் மற்றும் பேட்டிங்கில் ஆல் ரவுண்ட் முயற்சி தேவையாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.