ரோகித் தந்த ட்விஸ்ட்.. குப்பை மாதிரி வதந்திகளை பரப்பாதீங்க.. உண்மை இதான் – ராஜீவ் சுக்லா பேட்டி

0
61
Rohit

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான மூன்று நபர்கள் பற்றி குப்பையான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணியில் கேப்டன் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் இடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும், மேலும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்ந்து இருப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தை வற்புறுத்தியதாகவும் செய்திகள் மீடியாக்களில் தொடர்ந்து பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குப்பையான வதந்திகளை பரப்ப வேண்டாம்

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறும் பொழுது “ரோஹித் சர்மா இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் தொடர்வதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தை வற்புறுத்தினார் என்பது மிகவும் தவறான ஒரு தகவலாகும். அவர்தான் தற்போது வரையில் கேப்டன். மேலும் ஒரு வீரர் ஃபார்ம் இருப்பதும் பார்ம் இல்லாமல் போவதும் ஒரு பகுதியாக அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இருக்கிறது. இது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பார்சல். அவர் தனக்கு ஃபார்ம் இல்லாத காரணத்தினால் தன்னைத்தானே டிராப் செய்து கொண்டார்”

“மேலும் இந்திய அணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுவது மிகவும் தவறான ஒரு அறிக்கையாகும். தேர்வுக்குழு தலைவருக்கும் பயிற்சியாளருக்கும் இடையில் எந்த பிளவும் கிடையாது. இதே போல கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்திய அணி மிக ஒற்றுமையாக இருக்கிறது. இவை அனைத்தும் மீடியாக்களால் பரப்பப்படும் குப்பையான வதந்தி மட்டுமே ஆகும் என்று கூறி இருக்கிறார்”

- Advertisement -

ரோஹித் சர்மா தந்த ட்விஸ்ட்

இந்த நிலையில் மும்பை மாநில அணிக்காக ரோஹித் சர்மா ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்காக அவர் ரயில் மூலமாக வந்து ரகானே தலைமையிலான மும்பை மாநில அணியின் பயிற்சி குழுவில் இணைந்திருக்கிறார் என்கின்ற செய்திகளும் வெளிவருகிறது.

இதையும் படிங்க : பும்ரா பிராட்மேனையும் விட்டு வைத்திருக்க மாட்டார்.. ரன் ஆவரேஜை சரித்து விட்டிருப்பார் – கில்கிறிஸ்ட் பாராட்டு

இந்திய அணி இன்னும் ஆறு மாதம் கழித்து இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஆறு மாத காலத்தில் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா திரும்பி வருவது கடினம் என்று பலராலும் கூறப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் அவர் உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் விளையாட திரும்பி வந்திருப்பது, மீண்டும் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவதை குறிப்பதாகவே பார்க்கப்படுகிறது. மீண்டும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

- Advertisement -