“மீண்டும் தலைதூக்கும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை” …… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியா வீரர்கள் மீது பாகிஸ்தான்” முன்னால் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு!

0
5555

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .

இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா இரண்டாவது நாள் ஆற்றுநேரம் முடிவில் 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது மேலும் 318 ரன்கள் பின்தங்கி இருந்தது . முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டத்தை 327 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் உடன் துவங்கிய ஆஸ்திரேலியா இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 469 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது . இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் 13 ரன்களிலும் கேப்டன் ரோஹித் சர்மா பதினைந்து ரண்களிலும் புஜாரா மற்றும் விராட் கோலி தலா 14 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர் . இதனால் 71 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது .

அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஜிங்கியா ரகானே இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர் சிறப்பாக ஆடி 48 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா லியான்பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது . மேலும் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது .

குறிப்பாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் போலான்ட் ஆகியோர் மிகச் சிறப்பான லைன் அண்ட் லென்தில் பந்துவீசி இந்திய அணியை தடுமாறச் செய்தனர் . நேற்றைய ஆட்டு நேரம் முடிவில் பேட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க் கேமரூன் கிரீன் ஸ்காட் போலான்ட் மற்றும் நேதன் லியான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரரான பாசித் அலி ஆஸ்திரேலியா அணி மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்திருக்கிறார் . இதுகுறித்து தனது youtube சேனலில் பேசி இருக்கும் பாசித் அலி ஆஸ்திரேலியா வீரர்கள் தந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார் . ஆனால் இந்த போட்டியின் வர்ணனையாளர்களாக இருப்பவர்களோ அல்லது நடுவர்களோ இதைப் பற்றி கண்டுகொள்ளாதது வியப்பாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார் .

மேலும் தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ” விராட் கோலியை ஆட்டம் இழக்கச் செய்த ஸ்டார்க் வீசிய பந்து அவரது கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது பளபளப்பான பக்கம் வெளியே இருந்தது ஆனால் பந்து அதற்கு நேர் எதிராக திரும்பி அது . பந்தை சேதப்படுத்த வில்லை என்றால் இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பி இருக்கிறார் . தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இது போன்ற தவறான செயல்களை ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் பாசித் அலி .