அவர் உள்ள வரும்போது.. கேஎல் ராகுல் இதை செஞ்சே ஆகணும்.. இல்லனா மாட்டிக்குவாரு – மனோஜ் திவாரி கருத்து

0
667

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்சில் மிக மோசமாக செயல்பட்ட இந்திய அணி அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இந்திய வீரர்கள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேஎல் ராகுல் மீது அழுத்தம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் டக் அவுட் ஆன ஐந்து வீரர்களில் கே எல் ராகுலும் ஒருவராக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி தற்போது 70 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கும் நிலையில் நாளை நடைபெற உள்ள நான்காவது ஆட்டத்தில் கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் கில் காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பினால் கே எல் ராகுல் தனது இடத்தை தக்க வைக்க தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று மனோஜ் திவாரி கூறி இருக்கிறார்.

- Advertisement -

இளம் வீரருக்கு காத்திருக்கும் வாய்ப்பு

இது குறித்து அவர் கூறும் போது “இதற்கு முன்னர் நடைபெற்ற தொடரில் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருப்பதால் அவரை நீக்க முடியாது, மேலும் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அவர் காயத்தில் இருந்து மீண்டு வரும் போது அவருக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும். அப்போது கே எல் ராகுல் அதிக அழுத்தத்திற்கு தள்ளப்படுவார். கே எல் ராகுல் அடுத்த 2 டெஸ்ட்டில் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் இதற்குப் பிறகு நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதையும் படிங்க:சவுத் ஆப்பிரிக்காவுக்கு நடந்தது ஞாபகம் இருக்கா? நாளைக்கு நியூசிக்கு இந்திய அணி செய்யும் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேச்சு

இருப்பினும் அவர் அங்கு சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவருக்கு பதிலாக சர்ப்ராஸ் கான் பிளேயிங் லெவனில் விளையாடலாம். சர்ப்ராஸ்கானுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருப்பினும் இருப்பில் இருக்கும் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது நல்லது. விளையாடும் வீரர்கள் மீது நிச்சயம் அழுத்தம் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -