நேற்று பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடியாக டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது. தற்போது இந்த முடிவை பாகிஸ்தான் மீண்டும் மறு பரிசீலனை செய்யும் என செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது ஐசிசி அமைப்பு பாகிஸ்தான் உடன் இது குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. எனவே பாகிஸ்தான் சீக்கிரத்தில் தான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் மோதிக்கொள்ளாவிட்டால் ஒளிபரப்பாளர்கள் மட்டுமே 200 கோடியில் இருந்து 250 கோடி வரையில் நஷ்டத்தை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போட்டியை சுற்றி நடைபெறும் வியாபாரங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எந்தவிதமான வருவாய் இழப்பும் ஏற்படாது என்கின்ற தைரியத்தில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஐசிசி சந்திக்கும் இழப்புகளை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்காலத்தில் பெரிய இழப்புகளை சந்திக்கும் என எச்சரிக்கை செய்யப்பட்டு காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்போது ஐசிசி அமைப்புக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தற்காலிகமானது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஐசிசி பெரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறப்படுகிறது. முதலில் இருதரப்பு தொடர்களை விளையாடுவதற்காக பெரிய நாடுகள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என ஐசிசி தடை விதிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் உலக கோப்பையில் ஆட மாட்டோம்.. எங்க முடிவால் ஐசிசி நடுநடுங்கி போச்சு – ரஷீத் லத்தீப் பேச்சு
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தும் டி20 லீக் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்படும். இதன் காரணமாக பிஎஸ்எல் முழுவதுமாக பாதிக்கப்படும். இது நடந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒட்டுமொத்தமான வருவாயையும் இழக்கும். இப்படி நடந்தால் பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சி அடியோடு பாதிக்கப்பட்டு அவர்களின் தேசிய கிரிக்கெட் வீழ்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.