டி20 உலக கோப்பையில் இந்திய அணி உடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் முடிவு செய்ததால் ஐசிசி பீதி அடைந்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்திப் கூறியிருக்கிறார்.
நேற்று பாகிஸ்தான் அரசாங்கம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது. மேலும் டி20 உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்பதாகவும் அறிவித்தது. இந்த விவகாரம் உலக கிரிக்கெட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் என்ன?
பங்களாதேஷ் தங்களது டி20 உலக கோப்பை போட்டிகளை இந்தியாவில் பாதுகாப்பு இல்லை அதனால் விளையாட முடியாது என ஐசிசி அமைப்பிடம் முறையிட்டது. ஐசிசி அமைப்பு பங்களாதேஷ் இந்தியா சென்று கட்டாயம் விளையாட வேண்டும் என்று கூறியது. இதற்கான வாக்கெடுப்பில் பாகிஸ்தான், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
இந்த நிலையில் வாக்கெடுப்பில் பங்களாதேஷ் தோல்வியடைந்தது. அதே சமயத்தில் அவர்கள் ஒட்டுமொத்தமாக டி20 உலகக் கோப்பை தொடரை புறக்கணித்தார்கள். இதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
நடுங்கிப் போன ஐசிசி
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷீத் லத்திப் போகும் பொழுது “இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் எடுக்கப்படவில்லை பாகிஸ்தான் எடுத்து இருக்கிறது. மேலும் இந்த முடிவு கடந்த வாரமே எடுக்கப்பட்டு விட்டது நெருக்கடி கொடுக்க வேண்டும். என்பதற்காக கடைசி நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி செய்த அநியாயத்திற்கான எதிர்ப்பு. இந்தியா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான எதிர்ப்பு கிடையாது”
.இதையும் படிங்க : 189/5 ரன்.. முன்னேறி வந்த இலங்கை.. அனாயசமாய் அடித்த இங்கிலாந்து அணி.. தொடரை வென்றது.. 2வது டி20
“பொதுவாக ஐசிசி அமைப்பு ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக செயல்படாமல் மூடப்பட்டு இருக்கும். ஆனால் நேற்று எங்களுடைய அறிக்கை வெளியில் வந்ததும் அவர்களும் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள். இதிலிருந்து ஐசிசி எந்த அளவிற்கு இதனால் நடுங்கி போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும்” என்று கூறியிருக்கிறார்.






