ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. 59 வருடம்.. பாக் அணி மிகப்பெரிய சறுக்கல்.. இந்திய ஆஸ்திரேலிய அணிகள் அபாரம்

0
325

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே ஆன இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து பாகிஸ்தான் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் 1965 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் தர வரிசையில் மோசமான நிலைமைக்கு பாகிஸ்தான் அணி சென்றிருக்கிறது.

- Advertisement -

கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான வங்கதேச அணி பாகிஸ்தானில் ஒரு பயணம் செய்து ஷான் மசூத் தலைமையிலான அணியோடு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 அல்லது ஒரு நாள் போட்டிகளில் வேண்டுமானால் வங்கதேசம் ஏதாவது அதிசயங்கள் நிகழ்த்தும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் எதிர்பாராத வகையில் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

அப்போதாவது பாகிஸ்தான் அணி சுதாரித்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் முழுவதுமே இந்த தொடரில் பாகிஸ்தான் அணி மண்டியிட்டது போல இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய மோசமான நிலைமையாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போது டெஸ்ட் தர வரிசையில் பாகிஸ்தான் அணி 6வது இடத்தில் இருந்து தற்போது 8வது இடத்திற்கு 76 புள்ளிகளோடு தள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 59 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது போலவே உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தரவரிசையிலும் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதில் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 5ல் தோல்வியடைந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு தொடரையும் வெல்லவில்லை. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் ஆறு தோல்விகளையும், நான்கு போட்டிகளில் டிரா மட்டுமே செய்துள்ளது. இனி வருகிற அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ள நிலையில் அந்தத் தொடர் பாகிஸ்தான் அணியை காப்பாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் டீம் அதுக்குத்தான் சரி வரும்.. நான் சொன்ன அது ஞாபகம் இருக்கா? – ஹர்ஷா போக்லே வருத்தம்

ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் ஆஸ்திரேலியா அணி 124 புள்ளிகளோடு முதலிடத்திலும், 120 புள்ளிகளோடு இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 108 புள்ளிகளோடு இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2 போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 66 புள்ளிகளோடு ஒன்பதாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணி அடுத்ததாக இந்தியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இது இந்திய அணிக்கு சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னிலை பெற அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இருக்கும்.

- Advertisement -