வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடர் அமெரிக்கா ஃபுளோரிடா மாகாணத்தில் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பங்களாதேஷ் அணியிடம் இரண்டுக்கு ஒன்று என இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது சொந்த மண்ணில் ஐந்து போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் முழுமையாக தோற்றது. எனவே இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
போட்டி அட்டவணை
இந்த மூன்று பொட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 31, ஆகஸ்ட் 2 மற்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இது அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்த்தும் விதமாக நடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.
இரண்டு அணிகளும் பொதுவான இடத்தில் விளையாடுகின்ற காரணத்தினால் சொந்த இடத்தின் சாதகத்தை இழக்கின்றன. அதே சமயத்தில் அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்ற டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராக இந்த தொடர் முக்கியமாக அமைகிறது.
பாபர் ரிஸ்வானுக்கு நடந்த சோகம்
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் டி20 அணிக்கு சல்மான் அலி ஆகா கேப்டனாக தொடர்கிறார். அதே சமயத்தில் பாகிஸ்தான அணியின் நட்சத்திர பேட்டர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இடம் பெறவில்லை. அவர்கள் தொடர்ந்து டி20 அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அடுத்து டி20 உலக கோப்பை பாகிஸ்தான் அணியிலும் இடம் பெற மாட்டார்கள் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க : 89 ஆண்டு 89 ரன்.. கில் உடைக்க காத்திருக்கும் பிராட்மேனின் அசுர ரெக்கார்டு.. கவாஸ்கர் சாதனையும் காலி
பாகிஸ்தான் டி20 அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், சாஹிப்சாதா ஃபர்ஹான் (விக்கெட் கீப்பர்), சயீம் அகீப்பெர் மற்றும் சாஹிம் அகீப் மொகிம்.






