89 ஆண்டு 89 ரன்.. கில் உடைக்க காத்திருக்கும் பிராட்மேனின் அசுர ரெக்கார்டு.. கவாஸ்கர் சாதனையும் காலி

0
165
Gill

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் கவாஸ்கர் மற்றும் பிராட்மேனின் அரிய சாதனைகளை உடைப்பதற்கான வாய்ப்பில் மிக நெருக்கமாக இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியை டிரா செய்தாலோ அல்லது வென்றாலோ இங்கிலாந்து தொடரை கைப்பற்றும். அதே சமயத்தில் இந்திய அணி போட்டியை வென்றால் தொடரை சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கவாஸ்கரின் இரண்டு மெகா சாதனைகள்

தற்போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நடப்பு டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் 8 இன்னிங்ஸ்களில் 90.25 என்ற சராசரியில் நான்கு சதங்கள் உடன் 722 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் மூலம் தொடரின் கடைசி போட்டியில் சராசரியாக ரன்கள் எடுக்கும் பொழுது மிகப்பெரிய சாதனைகளை படைக்கக்கூடியதற்கான வாய்ப்பில் இருக்கிறார்.

சுனில் கவாஸ்கர் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டனாக 1978-79ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் 732 ரன்கள் எடுத்தார். இதை உடைப்பதற்கு கில்லுக்கு 11 ரன்கள் தேவை. மேலும் சுனில் கவாஸ்கர் 1971 ஆம் ஆண்டு ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 774 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த சாதனையை உடைப்பதற்கு தில்லுக்கு 53 இடங்கள் தேவை.

- Advertisement -

பிராட்மேனின் பெரிய சாதனை

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டனாக 1936-37 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா லெஜன்ட் டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக 810 ரன்கள் குவித்திருந்தார். 89 ஆண்டுகளாக இதுவே சாதனையாக நிலைத்து வருகிறது.

இதையும் படிங்க : ஓவல் டெஸ்ட்.. கம்பீர் பிட்ச் பராமரிப்பாளர் பிரச்சனை.. மனம் திறந்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்

இந்த நிலையில் தற்போது கில் 722 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் நடக்கவிருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 89 ரன்களுக்கு மேல் எடுத்தால் இந்த 89 வருட அதிக சாதனையை முறியடிப்பார். ஒட்டுமொத்தமாக மூன்று மெகா சாதனைகளை கில் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -