இந்திய அணி நாளை இலங்கை அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களம் இறக்கப்பட்டார். இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் அதே இடத்தில் சிவம் துபே களம் இறக்கப்பட்டார். மிடில் வரிசையில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதால் இதைப் பயிற்சியாளர் கம்பீர் செய்திருந்தார்.
இந்த நிலையில் அவருடைய இந்த பரிசோதனை முயற்சி இரண்டு போட்டிகளிலுமே தோல்வியை கொடுத்தது. முதல் போட்டி டை ஆக இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக மூன்றாவது போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்கின்ற நெருக்கடியில் இந்திய அணி சிக்கிக் கொண்டிருக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது ” இப்போது இந்திய அணி எந்த பரிசோதனை முயற்சியும் செய்யத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் முதல் போட்டி டை ஆக இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது. இப்போது கம்பீர் கொஞ்சம் விழிப்படைவார். அவர் தற்போது நான்காவது இடத்தில் பேட்டிங் வரிசையில் பரிசோதனை முயற்சி செய்து வருகிறார்.
தற்போது இந்த முயற்சியை அவர் கைவிட வேண்டும். உங்களிடம் மிடில் வரிசையில் விளையாட இருக்கும் ரியான் பராக் மற்றும் ரிஷப் பண்ட் போன்றவரை கொண்டுவந்து விளையாட வேண்டும். எதிர்காலத்தில் பங்களாதேஷ அணி வந்து விளையாடும் பொழுது இது உதவியாக இருக்கும். மூன்றாவது போட்டியை வென்று தொடரை சமன் செய்தால் அது நன்றாக இருக்கும். இல்லையென்றால் கம்பீர் மீது பெரிய அழுத்தம் உண்டாகும்.
இதையும் படிங்க : கங்குலியின் மறக்க முடியாத 17 வருட சாதனை.. ரோகித் உடைக்க கோல்டன் வாய்ப்பு.. 3வது போட்டியில் நடக்குமா?
இந்த அழுத்தம் அல்லது கேப்டன் ரோகித் சர்மாவுக்கோ வராது. கவுதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவுக்குத்தான் இந்த அழுத்தம் வரும். ஏனென்றால் தோல்வி கெட்டது வெற்றி நல்லது என்கின்ற எண்ணம் ஆசிய நாடுகளுக்கு பலகாலமாக கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. எனவே இப்போது பரிசோதனை செய்வதற்கான நேரம் இல்லை. கம்பீர் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.






