இங்கிலாந்து அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வி பல்வேறு கிரிக்கெட் முன்னாள் வீரர்களை கொதிப்படையை வைத்திருக்கிறது. ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
மோசமான நிலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட்
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனது சொந்த மண்ணில் வங்கதேச அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி அந்தத் தொடரில் வெற்றி பெற்று இழந்த பெருமையை கொஞ்சமாவது மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்ததை விட நிலைமை அப்படியே தலைகீழாக முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று இதுவரை செய்யாத சரித்திர சாதனையை நிகழ்த்தியது.
இது அதுவரை அமைதியாக இருந்த பாகிஸ்தான் வீரர்களை கொதிப்படைய வைத்தது. தங்களது காரசாரமான கருத்துக்களை பல விதங்களில் வெளிப்படுத்திய நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 500க்கும் அதிகமான ரன்களை குவித்த பிறகும் ட்ரா கூட செய்யாமல் தோற்று இருப்பது மேலும் விமர்சனங்களை வெளிப்படுத்த தூண்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த விஷயம் ரொம்ப வருத்தமா இருக்கு
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலக வேண்டும் என்று ரசிகர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை பார்த்தேன். பாகிஸ்தானுக்கு அணிகளை அனுப்பி டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நினைத்திருக்க வேண்டும். இது முற்றிலுமாக மன வருத்தத்தை அளிக்கிறது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வரப்போகும் திறமைகள் முற்றிலுமாக பாதிக்கிறது.
இதையும் படிங்க:100 கிலோ பெருசா 65 பெருசா.. இந்திய அணி ரொம்ப ஸ்ட்ராங்.. எங்களால அசைக்க முடியல – வங்கதேச கோச் பேட்டி
எனவே இதனை சரி செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை அறுவடை செய்வீர்கள். நான் பல தசாப்தங்களாக சரிவை கண்டுள்ளேன். தோற்றது கூட பரவாயில்லை ஆனால் விளையாட்டில் நெருக்கமாக போராடி இருக்க வேண்டும். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் பார்த்த வகையில் பாகிஸ்தான் அணி முற்றிலும் நம்பிக்கையை கைவிட்டது. நாம் விளையாட்டில் போதுமானவர்களாக இல்லை என்பதை காட்டுகிறது. இங்கிலாந்து அணி 800-க்கும் அதிகமான ரா
ன்களை எடுத்தது மட்டும் இல்லாமல் வங்காதேச அணியும் வீழ்த்தி இருக்கிறது” என்று கூறுகிறார்.






