ரொம்ப சாதாரணமா ஆயிருச்சு.. நாங்க எப்போ தோற்போம்னு மக்களே காத்திருக்காங்க – பாக் ஹாரிஸ் ராப் ஆதங்கம்

0
483

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோல்வி அடைந்து இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராப் பாகிஸ்தான் அணி குறித்தும் ரசிகர்கள் குறித்தும் சில வேதனையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து பாகிஸ்தான் டி20 தொடர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணியை அந்த நாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்தனர். எனவே அதனை ஓரளவு மறைக்கும் வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெறுவதற்கு பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றது. முதல் டி20 போட்டியில் 91 ரன்கள் மட்டுமே எடுத்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பாகிஸ்தான் அணி சந்தித்தது.

அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, பாகிஸ்தான் அணியின் மீதான விமர்சனம் இன்னும் அதிக அளவில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான ஹாரிஸ் ராப் எங்கள் அணி எப்போது தோல்வியடையும் எப்போது விமர்சனம் செய்யலாம் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என சில ஆதங்கமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாதாரண விஷயம் ஆயிடுச்சு

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” பாகிஸ்தான் வீரர்களை விமர்சிப்பது இப்போது ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. எங்கள் அணியில் இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று விளையாடுகிறார்கள், ஆனால் மற்ற அணிகளில் இளம் வீரர்கள் சுதந்திரமாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு 10 முதல் 15 ஆட்டங்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் முதன் முதலில் சர்வதேச கிரிக்கெட்டின் நுழையும் போது போராடுவீர்கள். அது சொல்லத் தேவையில்லை.

இதையும் படிங்க:புது கேப்டன் ரிஷப் பண்ட்டை.. லக்னோ டீம் இப்படிதான் பாப்பாங்க.. நிக்கோலஸ் பூரன் வெளிப்படையான பேச்சு

இப்போது இது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. நாங்கள் தோற்பதைக்கான மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு அவர்களின் கருத்துக்களும் உள்ளது. நாங்கள் எங்களால் முடிந்ததை செய்து அணியை கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்துகிறோம். மூத்த வீரர்களாக இளைஞர்களை ஊக்குவித்து சர்வதேச கிரிக்கெட்டை எவ்வாறு அணுகுவது என்று இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம்” என்று ஹாரிஸ் ராப் பேசியிருக்கிறார். மூன்றாவது டி20 போட்டி வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -