தற்போது நடைபெற்று வரும் ஆசியா கப் ரைசிங் ஸ்டார் டி20 தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஆசிய கப் தொடரில் பங்கேற்று விளையாடிய எட்டு அணிகள் இந்த தொடரிலும் பங்கேற்று விளையாடுகின்றன. இதில் பங்கேற்றுள்ள ஐந்து முன்னணி நாடுகள் தங்களுடைய ஏ அணியை அனுப்பி வைத்துள்ளனர். இந்திய ஏ அணியில் பல ஐபிஎல் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.
சூரியவன்சியின் அதிரடி வீண்
இந்தப் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக வந்ததில் பஞ்சாப் கிங்ஸ் பிரியன்ஸ் ஆர்யா 9 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
மூன்றாவது இடத்தில் வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நமன் திர் 20 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 35 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்து வந்த இந்திய அணிக்காக விளையாடும் ஜிதேஷ் சர்மா 5, பஞ்சாப் கிங்ஸ் அணியின் நெகில் வதேரா 8, டெல்லி அணியின் அசுத்தோஸ் சர்மா 0, ரமன்திப் சிங் 11 என சொற்ப ரன்னில் வெளியேறினார்கள்.
இந்திய அணிபடுதோல்வி
ஒரு கட்டத்தில் இந்திய அணி எட்டு புள்ளி இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிருந்து இந்திய அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகித் அசிஸ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : தயவு செஞ்சு டெஸ்ட் கிரிக்கெட்டை அழிச்சிடாதீங்க.. இதெல்லாம் ரொம்பவே அசிங்கம் – ஹர்பஜன் சிங் வேதனை
இதைத் தொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மாஸ் சடாகத் 47 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 79 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 13.2 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி அடுத்து இரண்டாவது சுற்றில் மீண்டும் பார்த்துதான் அணிக்கு எதிராக விளையாடும்.






