16/3 டு 448/6.. சவுத் ஷகில் முகமது ரிஸ்வான் மெகா பார்ட்னர்ஷிப்.. பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முன்னிலை

0
112
Pakistani

பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் தற்போது பாகிஸ்தான் வலிமையான இடத்தில் இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தானில் 28 வருடங்கள் கழித்து பிரதான சுழல் பந்துவீச்சாளர் 15 பேர் கொண்ட அணியில் இல்லாமல் களம் இறங்கி விளையாடியது.

- Advertisement -

ஆரம்பமே சரிவு

16 மாதங்கள் கழித்து உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய பாகிஸ்தான் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் கேப்டன் ஷான் மசூர் மற்றும் நட்சத்திர ஆட்டக்கார பாபர் அசாம் மூவரும் பதினாறு ரன்கள் எடுப்பதற்குள் வெளியேறி விட்டார்கள்.

இந்த நிலையில் நேற்று துணை கேப்டன் சவுத் ஷகீல் மற்றும் சையும் அயூப் இருவரும் சேர்ந்து 139 பந்துகளில் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார்கள். சிறப்பாக விளையாடிய சையும் அயூப் 98 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நேற்று நான்கு விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 150 ரன்கள் தாண்டி எடுத்தது.

- Advertisement -

இரண்டாவது நாளில் மீண்ட பாகிஸ்தான்

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை துணை கேப்டன் சவுத் ஷகில் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து ஆரம்பித்தார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தது.

சவுத் ஷகில் அரைசதம் அடித்திருக்க அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே சதம் அடித்து மேற்கொண்டு அசத்தினார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 386 பந்துகளில் 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சவுத் ஷகில் 261 பந்துகளில்
9 பவுண்டரிகள் உடன் 141 எடுத்து ஆட்டம் இழந்தார்.

இன்னொரு முனையில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நிலைத்து நின்ற முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 239 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 171 ரன்கள் எடுத்தார். ஷாகின் அப்ரிடி ஆட்டம் இழக்காமல் 24 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 113 ஓவர்களில் 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பங்களாதேஷ் தரப்பில் சோரிபுல் இஸ்லாம் ஹசன் மக்மத் மற்றும் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : உங்க பயோபிக் படத்தில்.. யார் ஹீரோவாக நடிக்க வேண்டும்? – டிராவிட் சொன்ன மாஸ் பதில்

இது தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பில்லாமல் 14 ஓவர்களுக்கு 27 ரன்கள் எடுத்து இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் அணி 421 ரன்கள் முன்னிலை பெற்று மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது. பங்களாதேஷ் அணி மேற்கொண்டு சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மட்டுமே மீண்டு வர முடியும்!

- Advertisement -