சிக்ஸர்களை பறக்க விட.. ஜேக் பிரேசரின் பயிற்சியாளரிடம் தஞ்சம் புகுந்த பாபர் அசாம்.. பவர் ஹிட்டிங் ஸ்பெஷலிஸ்ட்

0
409

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் அதன் கேப்டன் பாபர் ஆசமும் டி20 பேட்டிங் ஸ்டிரைக்ரேட்டுக்காக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் பாபர் ஆஸம் தனது பேட்டிங்கை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய பவர் பிட்டிங் நிபுணரின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் ஆசம் அறிவித்தார். இதை தொடர்ந்து டி20 அணிக்கு ஷாகின் சா அப்ரிடி கேப்டன் ஆக நியமிக்கப்பட்ட நிலையில், அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.

இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பைத் தொடங்கும் முன்பாக மீண்டும் பாபர் ஆசமையே கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆனால் அந்த முயற்சி பாகிஸ்தான் அணிக்குக் கை கொடுக்கவில்லை. இந்த முறையும் டி20 தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குறிப்பாக பாபர் ஆசமின் பேட்டிங் கடந்த காலத்தை விட தற்போது வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக டி20 தொடரில் அவரது ஸ்ட்ரைக்ரேட் போதுமானதாக இல்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் தனது அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக இருந்தாலும் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 101 ஆக இருந்திருக்கிறது. ஒரு சூழ்நிலையில் விராட் கோலிக்கு சரிசமமாக பேசப்பட்டவர் தற்போது பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில் தனது பேட்டிங் திறனை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பவர் ஹிட்டிங் நிபுணரான ஷானன் யங்கின் உதவியை பாபர் ஆசம் நாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லாகூரில் உள்ள உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த சந்திப்பின்போதே பாபர் ஆசம் ஷானன் யங்கிடம் பவர் ஹிட்டிங் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யங் பாபர் குறித்து கூறும் பொழுது “பாபர் ஆஸம் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் ஆஸ்திரேலியாவில் இருந்தால் நாங்கள் அவரை விமர்சிக்க மாட்டோம். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் சிறந்த வீரர்கள் எப்போதுமே மதிக்கப்படுவார்கள். ஆனால் பாகிஸ்தானில் பாபர் அதிக விமர்சனங்களை எதிர்கொள்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:சச்சின் தோனி.. யாரும் இங்க இந்த விஷயத்தில் ஸ்பெசல் கிடையாது – ரெய்னாவுக்கு உத்தப்பா எதிர் கருத்து

புகழ்பெற்ற பவர் ஹிட்டிங் நிபுணரான யங் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலிய இளம் வீரரான ஜேக் பிரேசர் மெக்கர்கின் பேட்டிங்கை வடிவமைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே போன்றவர்களுடனும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -