104 ரன்ஸ்.. கோலியின் அரிதான சாதனையை முறியடித்த பாபர் அசாம்.. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கப் 2024

0
59
Babar azam and Virat kohli

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் ஒரு நாள் கோப்பை 2024 ஏழாவது போட்டியில் ஸ்டாலியன்ஸ் அணி டால்பின்ஸ் அணியை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.

இதில் ஸ்டாலியன்ஸ் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் அபாரமாக விளையாடி சதம் அடித்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணிகள் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமின் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியதை தொடர்ந்து சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மோசமான பங்களிப்பை பாகிஸ்தான் அணிக்கு வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் தனது மோசமான பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை 2024 தொடரில் சிறந்த முறையில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதில் நேற்று நடைபெற்ற ஸ்டாலியன்ஸ் மற்றும் டால்பின் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாபர் அசாம் மூன்றாவது வரிசையில் களமிறங்கி 100 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஏழு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 104 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ஸ்டாலியன்ஸ் அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு களம் இறங்கிய டால்பின் அணி 25 ஓவர்களில் 97 ரன்கள் மட்டுமே குவிக்க, ஸ்டாலியன் அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிவேகமாக 30 சதங்கள் குவித்து இந்திய ஜாம்பவான் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 199 இன்னிங்ஸ்களில் 30 சதங்கள் அடித்து இருக்கும் விராட் கோலியை விட பாபர் அசாம் 180 இன்னிங்ஸ்களில் அந்த இலக்கை அடைந்தார்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்க அணியின் ஹாசிம் அம்லா 225 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். அதேபோல நியூசிலாந்து அணியின் மார்ட்டின் குப்தில் 259 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்ததாக இந்தியாவின் மூன்று ஜாம்பவான் வீரர்கள் இந்த பட்டியலில் இணைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:இன்று லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2024.. எப்போது எந்த சேனல்.?.. தினேஷ் கார்த்திக் முதல் கெயில் வரை பங்கேற்பு

முதலில் சிகார் தவான் 262 இன்னிங்ஸ்களிலும், சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ் களிலும் அதற்கு அடுத்ததாக தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 275 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -