இன்று லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2024.. எப்போது எந்த சேனல்.?.. தினேஷ் கார்த்திக் முதல் கெயில் வரை பங்கேற்பு

0
1601
Dhinesh karthik and Ambati rayudu

இந்தியாவின் உள்நாட்டு தொடரான லெஜென்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்க இருக்கின்றன.

தொடர் குறித்த ஏனைய விபரங்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

- Advertisement -

இந்தப் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு கிரிக்கெட் தொடர்களை ஒன்றிணைக்கும் பாலமாக கருதப்படுகிறது. இதன் மூன்றாவது சீசன் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளன. இதிலும் ஐபிஎல் தொடர் போன்று உலகம் எங்கும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகின்றனர். வருகிற வெள்ளிக்கிழமை ஜோத்பூரில் கொனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் மணிப்பால் டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஆட்டத்துடன் போட்டி தொடங்குகிறது.

25 போட்டிகளாக மொத்தம் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆறு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவின் நான்கு நகரங்களில் போட்டி நடைபெற உள்ளன. இதன் இறுதிப் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் சில சர்வதேச முக்கிய வீரர்களும் இடம் பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர்களான ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, கெளதம் கம்பீர், கிறிஸ் கெய்ல், ஆரோன் பிஞ்ச், மற்றும் ஹஷிம் ஆம்லா ஆகியோர் இதில் விளையாடுவதன் மூலமாக மீண்டும் ஒருமுறை தங்கள் திறமையை இந்த உலகிற்கு காட்ட இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் மற்றும் அம்பதி ராயுடு போன்ற வீரர்கள் தங்களது அறிமுக சீசனில் விளையாட உள்ளனர்.

நடப்புச் சாம்பியன் மணிபால் டைகர்ஸ் அணி முந்தைய சீசனின் இறுதிப் போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் இந்தியா கேபிடல்ஸ், குஜராத் கிரேட்ஸ், டோயம் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், மணிப்பால் டைகர்ஸ் மற்றும் கொனார்க் சூர்யா ஒடிசா என ஆறு அணிகள் விளையாட உள்ளன. இதில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும் அணிகள் லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இதையும் படிங்க:20 ஃபோர்ஸ் 5 சிக்ஸர்.. டிராவிஸ் ஹெட் காட்டடி.. இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸி அபார வெற்றி

இந்தத் தொடர் இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இணையதளத்தில் பேன் கோட் ஆப் மூலமாகவும் போட்டிகளை காண முடியும்.

- Advertisement -