டி20 உலக கோப்பைக்கு வித்தியாசமாக தயாராகும் பாகிஸ்தான்.. இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சவால்

0
117
Pakistan

கடந்த ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு வரை, பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருப்பதாக தோற்றமளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அப்படியே எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு தயாராக பாகிஸ்தான் வித்தியாசமான பயிற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டின் இறுதியில் ஆசியக் கோப்பைத் தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிகளுக்கு ஷாகின் அப்ரிடி கேப்டன் ஆகவும், சிவப்பு பந்து அணிக்கு ஷான் மசூத் கேப்டன் ஆகவும் கொண்டுவரப்பட்டார்கள். தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் வகாப் ரியாஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் இயக்குனராக முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

முகமது ஹபீஸ் பாகிஸ்தான் அணியின் இயக்குனராக ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் இருந்தார். இந்த சுற்றுப்பயணங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது. மேலும் முகமது ஹபீஸ் பாகிஸ்தான் வீரர்கள் உடல் தகுதியே இல்லாமல் இருக்கிறார்கள் என்று ட்விட்டரில் எழுதினார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெறுவார்கள் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், பாகிஸ்தான் அணி வீரர்கள் ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் சில பயிற்சிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக கயிற்றில் ஏறுவது மற்றும் கற்களை தூக்கிக்கொண்டு ஏறுவது போன்ற வித்தியாசமான பயிற்சிகளை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 3 போட்டி 39 ரன்.. டி20 உலக கோப்பைக்கு ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ய வேண்டுமா? – இந்திய முன்னாள் வீரர் கருத்து

அந்த குறிப்பிட்ட வீடியோவில் பேசியிருக்கும் ஹசன் அலி தாங்கள் டி20 உலக கோப்பைக்கு மிகச் சிறப்பான முறையில் உடல் தகுதியோடு தயாராவதற்கு இப்படியான பயிற்சி தேவை என்பதாக கூறி இருக்கிறார். மேலும் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.