பாகிஸ்தான் தொடரை ஆஸி விளம்பரப்படுத்தவே இல்ல.. காரணம் இந்திய அணிதான் – கோச் கில்லஸ்பி விமர்சனம்

0
1145
Gillespie

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களுக்கு விளம்பரம் செய்யவில்லை என்றும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னுரிமை கொடுக்கிறது எனவும் பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றி சாதனை படைத்தது. பல குழப்பங்களுக்கு மத்தியில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இந்த வெளிநாட்டு வெற்றி மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் தொடருக்கு விளம்பரம் இல்லை

தற்போது ஆஸ்திரேலியா சென்று இருக்கும் பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் தலைமையில் ஜேசன் கில்லஸ்பி பயிற்சியில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதற்கடுத்து உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களுக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சரியாக விளம்பரம் செய்யவில்லை என்றும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது எனவும் பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை உறுதியாக தோற்கடித்ததில் மகிழ்ச்சி

இது குறித்து ஜேசன் கில்லஸ்பி கூறும்பொழுது “உண்மையை சொல்வதென்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை விளம்பரப்படுத்தி நான் பார்க்கவில்லை. அவர்கள் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது அவர்களின் தனிப்பட்ட முடிவு மற்றும் தன்னுரிமை”

இதையும் படிங்க : கம்பீர் பேச்சு நடத்தை சரியில்ல.. பிசிசிஐ அவரை இந்த வேலைக்கு மட்டும் விடாதிங்க – மன்ஞ்ரேக்கர் விமர்சனம்

“இந்தத் தொடரில் எங்களுடைய சிறப்பான பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்டிங்கின் சில முக்கிய குறைகளை அம்பலப்படுத்தியது. அவர்கள் இதையெல்லாம் உணர்ந்து சரி செய்து கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் பெரிய அணிகள் எப்பொழுதும் அப்படித்தான் செய்யும். அடுத்த சவாலுக்கு அவர்களுடன் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்தது மட்டுமல்லாமல் அவர்களை உறுதியாக தோற்கடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -