பாகிஸ்தான் டீமை விட்டு வெளியேறிய ஷாகின் அப்ரிடி.. செய்த தப்புக்கு தண்டனையா? – கோச் கில்லெஸ்வி விளக்கம்

0
495
Shaheen

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்களிடையே ஒற்றுமையில்லாமல் இருப்பதாகவும், வீரர்கள் பயிற்சியாளர்களை மதிப்பதில்லை எனவும் பல குற்றச்சாட்டுகள் தற்போது சென்று கொண்டிருக்கிறது. இதில் ஷாகின் அப்ரிடி ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறாரா? என்பது குறித்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி விளக்கம் அளித்திருக்கிறார்.

நேற்று பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடி மீது பெரிய குற்றச்சாட்டுகள் வெளியானது. அவர் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக அயர்லாந்து டி20 தொடரில் பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றிருக்கும் முன்னாள் வீரர் அஸார் மக்மூத்தியிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார் என்று கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

மேலும் டி20 உலக கோப்பை தொடரின் போது அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் இடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார் என்றும், அதற்கு தலைமை பயிற்சியாளர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்திருக்கிறார் என்றும், எனவே நடவடிக்கைகள் அவர் மீது பாயலாம் என்றும் கூறப்பட்டது.

அதே சமயத்தில் அணியின் மேனேஜர்கள் ஷாகின் அப்ரிடி விஷயம் குறித்து விசாரணை செய்த போதிலும் கூட, அவருக்கான தண்டனையை எதுவும் கொடுக்கவில்லை என்றும் அவர்கள் மிக அலட்சியமாக நடந்து கொண்டார்கள் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் தான் ஷாகின் அப்ரிடி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்ற உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வந்தது. தற்போது இதற்கான காரணம் என்னவென்று பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய ஏகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கேப்டன்னா கம்மின்ஸ்தான்.. நான் ஆடறத பார்க்காமயே அத கெஸ் பண்ணி வாய்ப்பு குடுத்தார் – நிதீஷ் குமார் ரெட்டி பேட்டி

இதுகுறித்து ஜேசன் கில்லெஸ்பி கூறும்பொழுது “பங்களாதேஷ் டெஸ்ட் தொடரின் போது ஷாகின் அப்ரிடி மனைவியின் முதல் பிரசவம்நடக்க வாய்ப்புகள் உண்டு. எனவே அவருக்கு இந்த தொடரில் இதை முன்னிட்டு நாங்கள் ஓய்வு கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் பயிற்சியில் இருந்து ஷாகின் வெளியேறினார், விரும்பினால் ஓய்வு தருவோம் என்பதெல்லாம் ரசிகர்கள் வெறும் நாடகமாகவே பார்க்கிறார்கள். ஷாகின் அப்ரிடி செய்த தவறுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

- Advertisement -