இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் அந்தத் திட்டம் எங்களிடம் பலிக்காது.. 90கள் திரும்பி வரப்போகுது – பாக் கோச் பேட்டி

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் ஒரு குறிப்பிட்ட திட்டம் பற்றி தங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை எனவும், அது இந்திய அணியின் தனிப்பட்ட திட்டம் எனவும், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் அகிப் ஜாவேத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்ற போட்டியாக இது அமைகிறது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரும்பப் போகும் 90

பாகிஸ்தான் அணி 90களில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், இம்ரான் கான் எனச் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை வைத்திருந்தது. அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரையும் வென்றார்கள். அதற்கு இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தது.

இன்றைய போட்டி குறித்து பேசி இருக்கும் அகிப் ஜாவேத் கூறும்பொழுது “இந்த போட்டி குறித்து நிறைய கருத்துக்கள் விவாதங்கள் வெளியில் சென்று கொண்டிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். மற்ற அணிகளில் கூடுதலாக சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் குறைவான சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட திட்டமாகத்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுடைய சொந்த பலத்தில் விளையாடுகிறார்கள் அவ்வளவுதான்”

- Advertisement -

“எங்களிடம் இருக்கும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் கூட்டணி எனக்கு 90களை ஞாபகப்படுத்துகிறது. அந்த நிலைக்கு வருவதற்கு எங்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதை செய்வதற்கு தேவையான திறமை அவர்களிடம் இப்பொழுதே இருக்கிறது. எனவே எங்களுடைய வேகத் தாக்குதல் பற்றி நான் நம்பிக்கை உடன் இருக்கிறேன். இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஒரு சிறப்பு உணர்வு. இந்த போட்டியில் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்”

இந்தியாவின் திட்டம் அவர்களுடையது

“இந்திய அணி மூன்று அல்லது நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட திட்டம். நாங்கள் எங்களுடைய சொந்த பலத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். மேலும் விளையாடும் எங்களுடைய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு நல்ல அணியை தேர்ந்தெடுத்திருக்கிறோம்”

இதையும் படிங்க : மச்சான் விராட் நீ இதை மட்டும் செய் போதும்.. யாரை பத்தியும் கவலை இல்ல – அஸ்வின் வேண்டுகோள்

“நாங்கள் தேர்ந்தெடுத்த இந்த அணியை ஆதரிப்போம். எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. இவர்கள் மேட்ச் வின்னர்களாக வருவார்கள். மற்ற அணிகளின் திட்டங்களை நாங்கள் பின்பற்ற வேண்டியது கிடையாது. நாங்கள் தேர்வு செய்துள்ள திட்டம் எங்களை வெற்றி பெற செய்யும். எங்கள் வீரர்களை நாங்கள் மேட்ச் வின்னர்களாக பார்க்கிறோம்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts