இந்திய கிரிக்கெட்

இந்தியா சாம்பியன் மாதிரி விளையாடியது.. ஒரு விஷயத்தை செய்யாம பெரிய விலை கொடுத்துட்டோம் – யூனுஸ் கான் பேட்டி

இன்று முன்னாள் வீரர்களை உள்ளடக்கிய இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி பட்டத்தை வென்று சாம்பியன் ஆனது.

- Advertisement -

இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறிவிட்டன.

முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது. இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது. இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட இறுதி போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் சோயப் மாலிக் மட்டுமே 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அணி கவுரவமான டோட்டலை எடுக்க காரணமாக இருந்தார். பாகிஸ்தான் அணி முழுமையாக இருபது ஓவர்கள் விளையாடி ஏழு விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. அனுரூட் சிங் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இது தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அம்பதி ராயுடு 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஸ்பெஷல் இன்னிங்ஸ் விளையாடி கோப்பையை இந்தியா பக்கம் நகர்த்தினார். யூசுப் தான் 17 பந்தில் 30 ரன்கள் எடுக்க இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. தொடரை வென்று பாகிஸ்தான் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்த யூனுஸ் கான் ஏமாற்றம் அடைந்தார்.

இதையும் படிங்க : 2 மாசம் பயிற்சியே செய்யல தேர்தல் வேற.. யுவராஜ் சொன்ன இதைத்தான் செஞ்சேன் – தொடர் நாயகன் யூசுப் பதான் பேட்டி

இந்த போட்டியில் தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் யூனுஸ் கான் “இந்தியா ஜாம்பவான்கள் போல விளையாடியது. இறுதிப் போட்டி போன்ற பெரிய போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் தவறவிட்டது, கோப்பையை இழக்கும் அளவுக்கு பெரிய விலை கொடுக்க வேண்டியதாக அமைந்துவிட்டது. இந்தத் தொடர் முழுக்க நாங்களும் சிறப்பாக செயல்பட்டோம். எல்லோரும் போட்டி போட்டு செயல்பட்டார்கள். இதைச் செய்த நிர்வாகத்திற்கும் திரண்டு வந்து ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் நன்றி!” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts