30 ரன் டார்கெட்.. 13 மேட்ச்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி

0
617
Bangladesh

பாகிஸ்தான் அணிக்கு பாகிஸ்தானில் வைத்து முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு சுருள பங்களாதேஷ் அணி எளிதான வெற்றியைப் பெற்று அசத்தியிருக்கிறது.

மேலும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது தற்பொழுது அந்த அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இந்த தோல்வி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

தவறாக கணித்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர்

இந்த போட்டியில் டாஸ் தோற்று விளையாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் 171 துணை கேப்டன் சவுத் ஷகில் 141 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த நாளைக்கு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணி 565 ரன்கள் குவித்து அசத்தியது. மூத்த வீரர் முஸ்பிகியூர் ரஹீம் 191 ரன்கள் குவித்தார். மேலும் பேட்டிங் கீழ் வரிசையில் ரிட்டன் தாஸ் 56 மற்றும் 77 ரன்கள் குவித்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். துவக்க ஆட்டக்காரர்
சத்மன் இஸ்லாம் 91 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் விழுந்த பாகிஸ்தான் அணி

இதைத்தொடர்ந்து 117 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு எல்லாமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு இரண்டாவது இன்னிங்சில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 51 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபிக் 37 ரன்கள் எடுத்தார்.கேப்டன் ஷான் மசூத் 14, பாபர் அசாம் 22, சையும் அயூப் 1, சவுத் ஷகில் 0, ஆகா சல்மான் 0 ஆகிய பேட்ஸ்மேன்கள் சிற்பங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள். பங்களாதேஷ் அணிக்கு மெகதி ஹசன் மிராஸ் 4, ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : மார்க் வுட் ரூல்ட் அவுட்.. ஆனால் மகிழ முடியாத இலங்கை.. 6.7 அடி 20 வயது பையனால் பிரச்சனை

வெறும் 30 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாகிர் ஹசன் 15, சத்மன் இஸ்லாம் 9 ரன் ஆட்டம் இழக்காமல் எடுக்க 6.3 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதுவரை இரண்டு அணிகளும் மோதியதில் பாகிஸ்தான் 12 முறை வென்று இருக்கிறது ஒரு போட்டி டிரா ஆகி இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான பங்களாதேஷ அணியின் முதல் டெஸ்ட் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -