கோலியை விட.. என்னோட 24 வயசு வீரர் ரெக்கார்ட் பெரிசு.. அவர் வேணும் – பாகிஸ்தான் கேப்டன் பேச்சு

0
207
Virat

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலியை விட சிறந்த பள்ளி விபரத்தை வைத்திருக்கும் பாகிஸ்தான அணியின் 24 வயது வீரர் ஒருவரை தான் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

தற்போது பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மிகவும் பெரிய சரிவில் இருக்கிறது. எனவே மீண்டும் ஒரு புதிய வலிமையான பாகிஸ்தான் அணியை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தான் வீரர்களை ஆதரிப்பதை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

இங்கிலாந்து அணி அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அக்டோபர் 7, 15, 24 ஆகிய தேதிகளில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்ட அணியில் 24 வயதான தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் அவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராக இருக்கிறது.

இது குறித்து பத்திரிகையாளர்கள் பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து ஃபார்ம் இல்லாத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலை எப்போது மாறும்? இது சரியானதா? என்பது போன்ற கடுமையான கேள்விகளை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் இடம் வைத்தார்கள். இதற்கு ஷான் மசூத் மிகவும் வெளிப்படையான முறையில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியை விட சிறந்த பள்ளி விபரம்

இது குறித்து பேசி இருக்கும் ஷான் மசூத் கூறும்பொழுது “2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நல்ல முறையில் கிரிக்கெட் விளையாட வில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயத்தில் உங்களுடைய கேள்வி துல்லியமானது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் டி20 மற்றும் டெஸ்ட் புள்ளி விபரங்களை கலப்பது சரியானது கிடையாது. அப்துல்லா ஷபிக் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் விளையாடிய முதல் 19 டெஸ்ட் போட்டிகளில் அவர் விராட் கோலியை விட சிறந்த பள்ளி விபரம் வைத்திருக்கிறார்”

“நீங்கள் ஒரு ஆணியை உருவாக்கும் பொழுது வலிகள் ஏற்பட செய்யும். ஒரு கேப்டனாக நான் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். மேலும் மற்றவர்களும் பொறுப்பேற்க வேண்டும். அப்பொழுதுதான் இறுதியில் ஏதாவது நல்லது நடக்கும். இறுதியில் ஆதரித்து வந்திருந்தால் அதற்கு நான் மகிழ்ச்சி அடைவேன். கடவுள் விரும்பினால் அவர் சிறந்த சேவகனாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மாறுவார். நான் சரியானதை ஆதரித்து இருந்தால் இரவில் நிம்மதியாக தூங்குவேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ரோஹித் எங்களுக்கு சொன்ன மெசேஜ் இதுதான்.. அத கேட்டதுமே வேலை ஈசி ஆயிடுச்சு – கேஎல் ராகுல் தகவல்

விராட் கோலி 2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் தன்னுடைய முதல் 19 டெஸ்ட் போட்டிகளில் 40.62 ரன் சராசரி உடன் 1178 ரன்கள் எடுத்திருந்தார். அப்துல்லா ஷபிக் 19 டெஸ்ட் போட்டிகளில் 1372 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -