பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா கொடுத்த திட்டம் பற்றி கேஎல்.ராகுல் பேசியிருக்கிறார்.
கேஎல்.ராகுல் இன்டெண்ட் இல்லாமல் விளையாடுவதாகவும் அவருடைய இடம் சீக்கிரத்தில் சர்பராஸ் கானுக்கு கொடுக்கப்பட்டும் எனவும் தகவல்கள் பரவி வந்தன. இப்படியான நிலையில் அதிரடியாக அரைசதம் அடித்து தன்னை நிரூபித்து இருக்கிறார்.
கேஎல் ராகுல் – விராட் கோலி கூட்டணி
இந்த நிலையில் நேற்று இந்திய வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்தார்கள். கேப்டன் ரோஹித் சர்மா 11 பந்தில் 23 ரன்கள் எடுக்க இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 52 பந்தில் 71 ரன்கள் எடுத்தார். சுப்மன் வில் 36 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.
இப்படியான நிலையில் உள்ளே வந்த கேஎல் ராகுல் அதிரடியாக விளையாட வேண்டி இருந்தது. அவரால் அப்படி விளையாட முடியுமா என்கின்ற சந்தேகமும் இருந்தது. இப்படியான நிலையில் யாரையும் விட அதிரடியாக விளையாடி கேஎல்.ராகுல் அரைசதம் அடித்து 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். மேலும் விராட் கோலியுடன் இணைந்து 59 பந்துகளில் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
ரோகித் சர்மா சொன்ன மெசேஜ்
இதுகுறித்து கேஎல் ராகுல் பேசும் பொழுது ” தொடக்கத்தில் இருந்தே எங்களுக்கு மெசேஜ் மிகவும் தெளிவாக இருந்தது. நாங்கள் மழையின் காரணமாக இரண்டு நாட்களை இழந்து விட்டோம். மேலும் பெரும்பாலான நேரத்தை வானிலை காரணமாக இழந்திருக்கிறோம்.ஆனால் மீதமுள்ள நேரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்து பார்க்க விரும்பினோம். திட்டம் எளிமையானது வெற்றி பெறுவதற்கான வழியை தேடுங்கள்என்று கூறப்பட்டது”
இதையும் படிங்க : வெறும் 95 ரன்.. மழையிடமிருந்து மேட்சை எடுத்த இந்தியா.. பங்களாதேஷ் அணியை சுருட்டியது.. வெற்றி பிரகாசம்
“நாங்கள் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தோம். ஆனால் விக்கெட்டுகளைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா எங்களுக்கு தெளிவாக கூறியிருந்ததால், நாங்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முடித்தோம்” என்று கூறி இருக்கிறார்