இந்தியா மேட்ச் பிக்சிங் செய்ய நிரந்தர அம்பயரை வச்சிருக்கு.. 90 மேட்ச்ல கண்கூடா பாத்தாச்சு – ரமீஷ் ராஜா குற்றச்சாட்டு

0
53
Raja

இந்திய அணி நிர்வாகம் மேட்ச் பிக்சிங் செய்வதற்காக நிரந்தரமாக அம்பையரை வைத்திருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா பகிங்ர குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத சம்பவத்திற்கு போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராப்ட் முக்கியமான காரணமாக இருந்தார் எனக் கூறி அவரை ஆசியக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் இரண்டு முறை கோரிக்கை வைத்தது. இரண்டு முறையும் ஐசிசி இதை நிராகரித்து விட்டது.

- Advertisement -

விளையாட மறுத்த பாகிஸ்தான்

இந்த நிலையில் நேற்று யுஏஇ அணைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவதற்கு மைதானத்திற்கு வரவில்லை. இதன் காரணமாக பெரிய பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரம் தாமதமாக மைதானத்திற்கு பாகிஸ்தான் அணியை அனுப்பியது.

இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரமீஷ் ராஜா பேசும்பொழுது “இது எங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றி. இது ஒரு முக்கியமான சூழ்நிலை என்பதால் உணர்ச்சிகள் அதிகம் காணப்பட்டன. ஆனாலும் நாங்கள் உணர்வுவயப்பட்டு முடிவை எடுக்கவில்லை. நாங்கள் போட்டியை புறக்கணித்திருந்தால் எங்கள் கிரிக்கெட் சேதப்பட்டு இருக்கும். எல்லாவிதமான பதில்களையும் எங்கள் அணி தான் கூற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். எங்களுக்கு விரக்தி இருக்கிறது. ஆனால் அதை மைதானத்தில் சிறப்பாக விளையாடி தீர்த்துக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

நிரந்தர பிக்சிங் அம்பயர்

“இந்த விஷயத்தில் என்னுடைய மிகப்பெரிய ஆட்சேபனை என்னவென்றால் பாகிஸ்தான் போட்டி முடிந்ததும் சூரியகுமார் யாதவ் பேசிய விஷயங்கள்தான். அதற்கு மன்னிப்பு கேட்டிருந்தால் விஷயம் அத்தோடு முடிந்திருக்கும். கிரிக்கெட் ஒரு அரசியல் களமாக மாறினால் அது சரியாக இருக்காது. ஆனால் எங்களுடைய அணி சிறப்பாக செயல்படும் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க : ஒமான் போட்டி.. இந்திய பிளேயிங் லெவனில் கம்பீர் செய்யும் மாற்றங்கள்.. 2வது ரவுண்டுக்கு ஸ்பெஷல் பரிசோதனைகள்

“இந்த போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராப்ட் இந்திய அணிக்கு எப்போதும் பிடித்தமானவர் என்பதை நான் பார்த்து வந்திருக்கிறேன். இந்திய அணியை பொருத்தவரை அவர்களுக்கான நிரந்தர மேட்ச் செய்வதற்கான அம்பயர் அவர். இதுவரையில் 90 இந்திய போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறார். இது அப்பட்டமாக வெளிப்படையான உண்மை” என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

- Advertisement -