இந்தியாவுடன் செமி பைனல் பைனல் விளையாடுவீர்களா?.. பாகிஸ்தான் கேப்டன் சொன்ன வித்தியாசமான பதில்

0
12
Salman

தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான அணி விளையாடாது என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதே சமயத்தில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் விளையாடுவார்களா? என்பது குறித்து பாகிஸ்தான் கேப்டன் கூறி இருக்கிறார்.

இந்திய அணி தனது பிரிவில் இடம்பெற்று இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் சுற்றில் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் தான் பாகிஸ்தான் அரசாங்கம் தங்கள் அணி விளையாடாது என்று அறிவித்திருக்கிறது.

- Advertisement -

அரையிறுதியில் என்ன நிலைமை?

இந்தநிலையில் ஒருவேளை பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் போட்டிகளில் நேரடியாக மோதிக் கொள்ள வேண்டிய நிலை வந்தால் பாகிஸ்தான் அரசாங்கம் என்ன முடிவு செய்யும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களின் முடிவு என்னவாக இருக்கும்? என்று உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் சந்தேகம் இருந்து வந்தது.

மேலும் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் இந்திய அணிக்கு எதிராக விளையாடவில்லை என்றால் அவர்களுடைய ரன் ரேட் பெரிய அளவில் அடி வாங்கும். எனவே அவர்கள் தங்கள் பிரிவில் மீதம் இருக்கும் மூன்று அணிக்கு எதிராகவும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாகிஸ்தான் கேப்டன் பதில்

இதுஒரு புறம் சென்று கொண்டிருக்க ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய அணியுடன் மோதுவதற்கான சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் காட்டி வருகிறது.

இதையும் படிங்க: நாங்க பாகிஸ்தான் கூட விளையாட கொழும்பு போவோம்.. இங்கேயே நின்னுக்க மாட்டோம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது “இந்திய அணிக்கு எதிரான போட்டி எங்களுடைய கட்டுப்பாட்டில் கிடையாது. இது அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு. நாங்கள் எங்களுடைய அரசாங்கத்தின் முடிவை மதித்து அதன்படி நடக்கிறோம். மேலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மோத வேண்டி வந்தால் அரசாங்கத்திடம் கேட்டு அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடந்து கொள்வோம். இதில் நாங்களாக ஒரு முடிவு எடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -