இந்திய கேப்டன் சூர்யா குமார் யாதவ் தாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் விளையாட மறுக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இந்த மாதம் பிப்ரவரி ஏழாம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி பிப்ரவரி பதினைந்தாம் தேதி கொழும்பு மைதானத்தில் நடப்பதாக இருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்குமா?
இந்த நிலையில் திடீரென பாகிஸ்தான் அரசாங்கம் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் அணி விளையாடாது என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சமரசம் செய்யும் முயற்சியில் ஐசிசி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒருவேளை இந்த முடிவில் பாகிஸ்தான் அரசாங்கம் பின்வாங்காமல் இருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரிய அளவுக்கு ஐசிசி ஏற்படுத்தும் தடையால் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் கூட பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரையில் முன்னேற்றமான தகவல்கள் எதுவும் வெளியில் வரவில்லை.
நாங்கள் மறுக்கவில்லை
இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இது குறித்து பேசும் பொழுது “நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் பாகிஸ்தானுடன் விளையாட தயாராகவே இருக்கிறோம். ஆனால் மறுப்பு அவர்களிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஐசிசி போட்டி அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறது”
இதையும் படிங்க : நானும் இந்திய அணியும் உலக கோப்பைக்கு ரெடி.. இந்த ரெண்டு பேருக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன் – திலக் வர்மா பேட்டி
“மேலும் அரசாங்கம் ஒரு நடுநிலையான இடத்தில் விளையாடுவதற்கு இடத்தை தேர்வு செய்திருக்கிறது. நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம். ஏற்கனவே எங்களுக்கு விமான டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே நாங்கள் முன்கூட்டியே கொழும்புக்கு செல்வோம்” என்று கூறி இருக்கிறார்.






