ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற உள்ள முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான முகமது ரிஸ்வான் சொந்த நாட்டில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
1996 ஆம் ஆண்டு ஐசிசி தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அதற்குப் பிறகு சில பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக ஐசிசி தொடரை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்கவில்லை. அதற்குப் பிறகு கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ளது.
பாகிஸ்தானில் விளையாட ஏழு சர்வதேச நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில், இந்தியா மட்டும் பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக மறுப்பு தெரிவித்ததை அடுத்து இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் மட்டும் துபாயில் விளையாடுமாறு மாற்றங்கள் செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தங்களது நாடு ஏராளமான துன்பங்களை சந்தித்து விட்டதாகவும், இப்போது அதனை மறந்து கொண்டாடக்கூடிய நேரம் வந்திருப்பதாக சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
போதுமான துன்பங்களை சந்தித்தோம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” 29 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு உலகளாவிய நிகழ்வு நடந்துள்ளது. எனவே முழு தேசமும் இந்த நிகழ்வை முழுமையாக அனுபவிக்க வேண்டும். எங்கள் பாகிஸ்தான் போதுமான துன்பங்களை இதுவரை சந்தித்துள்ளது. ஆனால் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2009 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை போலவே இந்தக் கட்டத்திலும் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
இதையும் படிங்க:இந்த இந்திய வீரர் பந்து வீசுவதை பார்க்கவே ரொம்ப பிடிக்கும்.. அதிக விக்கெட் இவர்தான் எடுப்பார் – இங்கி முன்னாள் கேப்டன்
ஹாரிஸ் ராப் தற்போது வலைகளில் நன்றாக பந்து வீசி வருகிறார். அவர் எந்த அசவுகரியத்தையும் அனுபவிக்கவில்லை. அவர் தற்போது முழு உடல் தகுதியில் இருக்கிறார். சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் அவரது பங்களிப்புகள் குறித்து நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம். அவர் தனது உடல் தகுதிக்காக மிகக் கடுமையாக உழைத்து வருகிறார். இதன் நேர்மறையான பலன்களை நாம் காண முடியும். ஹாரிஸ் போட்டியில் ஒரு முக்கிய பங்கு வகிப்பார் என்று நாங்கள் நம்பலாம். அவர் முழு உடல் தகுதியுடன் திரும்புவதை காண நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






