சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெற உள்ள நிலையில், முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவிக்க போகும் வீரர் மற்றும் அதிக விக்கெட் எடுக்க போகும் வீரர் குறித்து சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் இன்று முதல் போட்டி நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட தயாராக இருக்கின்றன. இதற்கு அடுத்த நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எதிர்கொண்டு விளையாட தயாராக இருக்கின்றன.
இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக மாயாஜால சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி வாய்ப்பு பெற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்த மைக்கேல் அதர்டன் தென் ஆப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஹென்றிச் கிளாசன் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய வீரராகவும், இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அதிக விக்கெட் வீழ்த்தக் கூடிய வீரராகவும் இருப்பார் என்று கணித்து இருக்கிறார்.
அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தென் ஆப்பிரிக்க அணியின் ஹென்ரிச் கிளாசின் அபாரமான பார்மில் இருப்பதால் அவரை அதிக ரன்கள் எடுக்கக்கூடிய வீரராக தேர்வு செய்வேன். ஆனால் நீங்கள் தொடக்க வீரர் அல்லது முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அவர் ஒரு சிறந்த ஷார்ட் ஃபார்ம் வீரர், அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். எனவே இந்த தொடரில் அபாரமாக செயல்படுவார் என்று தோன்றுகிறது.
இதையும் படிங்க:பும்ரா இடத்தை நிரப்ப.. அவர் மாதிரியே இந்த திறமை இருக்கிற இந்த பவுலர்தான் எனக்கு வேணும் – ரிக்கி பாண்டிங் பேட்டி
அதேபோல பந்து வீச்சாளரை பொருத்தவரை இங்கிலாந்தின் அடில் ரஷீத் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்று கூறுவேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் அவர் தனது திறமையில் இப்போது உண்மையிலேயே வல்லவராக இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு வருமா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிற போது நான் இந்தியாவின் குல்தீப் யாதவை தேர்வு செய்வேன். அவர் பந்து வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் தாக்குதல் நடத்தும் ஒரு சுழற் பந்துவீச்சாளர். அவர் நிறைய பன்முகத்தன்மை கொண்ட வீரர். மேலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பகுதியில் விளையாடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.






