பும்ரா கிடையாது.. உலகத்திலேயே நான் சந்திச்சதுல கஷ்டமான பவுலர் இவர்தான் – பாபர் அசாம் பேட்டி

0
1647
Babar

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மூன்று வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் பாபர் அசாம் விலகிக் கொண்டார். இந்த நிலையில் மீண்டும் டி20 உலகக்கோப்பைக்கு அவரை கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்து வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று பாபர் அசாம் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிலும் அணிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக பாபர் அசாம் தாமாகவே முன்வந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத் கேப்டன் ஆகவும், வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவங்களுக்கு ஷாகின் அப்ரிடி கேப்டன் ஆகவும் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் ஷாகின் அப்ரிடி கேப்டன்சி பொறுப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டு மீண்டும் பாபர் அசாமைகேப்டனாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் சொந்த நாட்டில் இரண்டாம் கட்ட நியூசிலாந்து அணியிடம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணியால் சமன் செய்ய மட்டுமே முடிந்தது. மேலும் அயர்லாந்து சென்று தற்போது முதல் போட்டியை தோற்று, அதற்கு அடுத்த இரண்டு போட்டியையும் வென்று டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றி இருக்கிறது. மேலும் அவர்கள் அப்படியே இங்கிலாந்து செல்கிறார்கள். இந்த நிலையில் தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார்? என பாபர் அசாம் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பாபர் அசாம் கூறும்பொழுது “ஆஸ்திரேலியா கேப்டன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் எவ்வாறு தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அவர் ஒரு லூஸ் பந்தை கூட நமக்கு கொடுக்க மாட்டார். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் பந்து வீசி, ஒரு பேட்ஸ்மேன் எப்படி அவுட் செய்ய வேண்டும் என அவருக்கு தெரியும். அவர் உங்களை சிக்க வைப்பார். உங்களுக்கு கடினமான நேரத்தைக் கொடுப்பார். அவர் உங்களுடைய மனநிலை மற்றும் பேட்டிங் தொழில்நுட்பத்திற்கு சவால் விடுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே அணிக்கு புள்ளி பட்டியலில் 2வது இடம் கிடைக்குமா? நடக்க வேண்டிய 3 விஷயங்கள்.. முழு அலசல்

பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களை தவிர இந்திய அணியுடன் விளையாடாத காரணத்தினால், பாபர் அசாமுக்கு பும்ராவை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. மேலும் கடந்த முறை பாகிஸ்தான் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் கம்மின்ஸ் இடம் பாபர் அசாம் தொடர்ந்து ஆட்டம் இழந்தார். இப்படியான நிகழ்வுகளால் பாபர் அசாம் இப்படியான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது!