நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், புள்ளி பட்டியலில் பரபரப்பான நிலைமைகள் காணப்படுகிறது. இந்த நிலையில் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்தை பிடித்து, இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடும். தகுதி சுற்றில் தோல்வியடையும் அணி, தொடரை விட்டு வெளியேறாமல், மீண்டும் ஒருமுறை இறுதிப் போட்டிக்கான இலுமினேட்டர் சுற்றில் விளையாடும். எனவே புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் வருவது முக்கியமானது.
இந்த நிலையில் தற்போது கொல்கத்தா அணி 13 போட்டிகளில் 9 வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனவே இந்த அணிக்கு முதல் இடம் அல்லது இரண்டாம் இடம் என்பது உறுதியாக இருக்கிறது. எனவே இவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாடுவார்கள்.
அதே சமயத்தில் ராஜஸ்தான் 13 போட்டிகளில் 16 புள்ளிகள் எடுத்து, +0.273 ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்திலும், சிஎஸ்கே 13 போட்டியில் 14 புள்ளிகள் எடுத்து, +0.528ரன் ரேட் உடன் மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் 12 போட்டியில் 14 புள்ளிகள் எடுத்து, +0.406 ரன் ரேட் உடன் நான்காவது இடத்திலும் இருந்து வருகின்றன.
இதில் ஒரு போட்டியில் விளையாட வேண்டி இருக்கின்ற ராஜஸ்தான் அணியின் ரன் ரேட்டில் மற்ற அணிகளை விட கீழே இருக்கிறது. எனவே ராஜஸ்தான் அணி தன்னுடைய கடைசி போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில், சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் 16 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.
இதையும் படிங்க : ஐபிஎல் இந்திய வீரர்களை இப்படி ஆக்கிடுச்சு.. டி20 உலக கோப்பையை வெல்ல இதை செய்யாம முடியாது – ஹர்பஜன் சிங் பேட்டி
மேலும் ராஜஸ்தான் தன்னுடைய கடைசி போட்டியில் தோற்று, ஹைதராபாத் அணி தன்னுடைய கடைசி இரண்டு போட்டிகளிலோ அல்லது ஒரு போட்டியிலோ தோற்று ரன் ரேட்டில் பின் தங்கி இருக்க, சிஎஸ்கே தன்னுடைய கடைசிப் போட்டியில் வெல்லும் பொழுது, சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு நிச்சயம் வர முடியும். ராஜஸ்தானின் தொடர் நான்கு தோல்விகள் இப்படியான நிலையை உருவாக்கி இருக்கிறது.