“எங்க வெற்றியை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியல.. திருந்த பாருங்க!” – முகமது சமி டைரக்ட் அட்டாக்!

0
447
Shami

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு இறுதிப் போட்டியில் மட்டுமே வெற்றிக்கு சரியானதாக இல்லை.

மற்றபடி இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுக்கவும் இந்திய அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. தோற்காத ஒரே அணியாக உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான முறையில் செயல்பட்டதன் காரணமாக, வெளியில் இருந்து குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து ஹசன் ராஸா, சிக்கந்தர் பக்த் போன்ற முன்னாள் வீரர்கள் மோசமான கருத்துக்களை கூறினார்கள்.

இந்திய வீரர்களுக்கு சிறப்பு பந்துகள் தரப்படுகிறது என்றும், கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் போடும்பொழுது வேண்டுமென்றே நாணயத்தை தூரமாக தூக்கி எறிந்து சதி செய்கிறார் என்றும், சிறுபிள்ளைத்தனமான பேச்சுகள் நிறைய வந்தன.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணிக்கு நடந்து முடிந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக பந்து வீசி 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது சமி பதிலடி கொடுத்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

முகமது சமி கூறும் பொழுது “உலகக்கோப்பையில் நாங்கள் பெற்ற வெற்றியை சில பாகிஸ்தான் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் மனதில் தாங்கள்தான் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். இருப்பினும் முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்படுபவர்கள்தான் சிறந்தவர்கள்.

அவர்கள் தொடர்ந்து அறிக்கைகளை கொடுத்து பரபரப்பை கிளப்பினார்கள். எங்களுக்கு சிறப்பு பந்து கொடுக்கப்படுவதாக கூறி சர்ச்சையில் சிக்கினார்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். முன்னாள் வீரர் ஒருவர் இப்படி பேசினால் உலகம் அவரை பார்த்து சிரிக்கும்.

நான் இன்ஸ்டாகிராமை திறக்கும் பொழுது தான் நான் முறியடித்த சாதனைகளை பற்றி அறிந்து கொண்டேன். எனக்கு கொடுக்கப்பட்ட ரோலை செய்வதே என்னுடைய முக்கியமான வேலை. அணிக்கு எது நல்லது என்பதை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். உங்களால் எல்லா நேரத்திலும் சிறப்பாக செயல்பட முடியாவிட்டாலும் சூழ்நிலையை ரீட் செய்வது அவசியம்!” என்று கூறி இருக்கிறார்!