“பாகிஸ்தான் செமி பைனலுக்கு வரலாம்.. ஆனா இந்தியாகிட்ட என்ன நடக்கும்?” – முகமது கைஃப் அதிரடியான பேட்டி!

0
1344
Kaif

தற்பொழுது நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்க அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளாக இருக்கின்றன!

மூன்றாவது இடத்திற்கு ஆஸ்திரேலியா வலிமையான முன்னணியில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவிடமிருந்து இந்த இடத்தை பறிப்பது என்பது சற்று கடினமான காரியமே.

- Advertisement -

இந்த நிலையில் கடைசி மற்றும் நான்காவது இடத்திற்கான நியூசிலாந்து, பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

இதில் மூன்று அணிகளும் தலா எட்டு புள்ளிகள் எடுத்திருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமே இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது. ஆனால் அந்த இரண்டு போட்டிகளும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இருக்கிறது என்பது பாதகமான விஷயம்.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே எஞ்சி இருக்கிறது. நியூசிலாந்து இலங்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராகவும் விளையாடுகிறது. இதில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் பெரிய வெற்றி பெற வேண்டியது வரும். இல்லையென்றால் நியூசிலாந்து தோற்று பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு வரும்.

- Advertisement -

இந்தவகையில் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு வருமென்றால், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருக்கும் இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டியது வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறும் பொழுது “பாகிஸ்தானால் அரை இறுதிக்கு வரமுடியும். ஆனால் அந்தப் போட்டி ஒருதலைப் பட்சமானதாக இந்தியாவின் பக்கமே இருக்கும். ஏனென்றால் இதற்கு முன்னான வரலாறுகள் அப்படித்தான் இருக்கிறது.

இந்தியா இதற்கு முன் மோதியபொழுது மிக எளிதாக பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் தற்பொழுது அரையிறுதிக்கு வர வேண்டும் என்றால், இங்கிலாந்துக்கு எதிராக நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!