தற்போது யுஏயில் நடைபெற்று வரும் அண்டர் 19 ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஜப்பான் அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாள் அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்று இருக்கின்றன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அசத்திய பாகிஸ்தான் துவக்க ஜோடி
முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு 30.1 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கான் 94 பந்துகளில் 60 ரன்கள், ஷஜாய்ப் கான் 147 பந்துகளில் அதிரடியாக 5 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் 159 ரன்கள் குவித்து மிரட்டினார்.
இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு முகமது ரியாஸ்யுல்லாஹ் 33 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை. பாகிஸ்தான் அண்டர் 19 அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் சமர்த் நாகராஜ் 3, ஆயுஸ் மத்ரே 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஏமாற்றிய இளம் இந்திய அணி
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஆயுஸ் மத்ரே 14 பந்தில் 20 ரன்கள், ஐபிஎல் ஏலத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கிய 13 வயது அபினவ் சூரியவன்சி 1 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து ஆன்ட்ரே சித்தார்த் 15, முகமத் அமான் 16, கிரண் கோர்மால் 20, ஹர்வன்ஸ் சிங் 26, ஹர்திக் ராஜ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : 233 ரன்.. இலங்கை அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி.. ஆஸி புள்ளி பட்டியலில் இறங்கியது
இதைத் தொடர்ந்து ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய நிகில் ராஜ் 77 பந்தில் 67 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்து போராடிய முகமத் இனான் அதிரடியாக 22 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அண்டர் 19 அணி இறுதியாக 47.1 ஓவரில் 237 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அண்டர் 19 அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அலி ராஸா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.