“ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் அடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர்” – வீடியோ லிங்க் உள்ளே!

0
551

சில காலமாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தான் செல்வதற்கு மற்ற கிரிக்கெட் அணிகள் தயக்கம் காட்டி வந்ததால் அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நீண்ட காலம் நடைபெறாமல் இருந்தது .

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு அங்கு தீவிரவாத இயக்கங்கள் ஒடுக்கப்பட்டு அமைதி நிலவியதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் மறுபடியும் ஆரம்பித்தது. 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானிற்கு முதன் முதலாக சுற்றுப்பயணம் செய்து ஆடியது . அதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி 2021 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொண்டது . தற்போது அனேக சர்வதேச அணிகளும், பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன .

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களைத் தவிர பிற பகுதிகளிலும் கிரிக்கெட்டை கொண்டு சேர்க்கும் விதமாக கண்காட்சி போட்டிகளை நடத்த திட்டமிட்டு இருக்கிறது பாகிஸ்தான் . இதன் ஒரு பகுதியாக அங்குள்ள பலூச்சிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு எதிரான டி20 கண்காட்சி போட்டியை ஏற்பாடு செய்திருந்தது .

இந்தப் போட்டி குவெட்டாவில் உள்ள புக்டி மைதானத்தில் நடைபெற்றது . முதல்முறையாக அந்த பகுதிகளில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தனர் . டாசில் வெற்றி பெற்ற பாபர் அசாம் குவெட்டா அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிந்தார் .

முதலில் ஆடிய குவெட்டா அணியின் துவக்க வீரர்களான உமர் அக்மல் மற்றும் ஆசான் அலி ஆகியோர் வஹாப் ரியாசின் வேகத்தில் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டம் இழந்தனர் . இதனைத் தொடர்ந்து குஷ்தில் ஷா மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர் . சிறப்பாக ஆடிய இஃப்திகார் 42 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். குஷ்தில் ஷா 24 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார் . மேலும் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிய இஃப்திகார் அகமது கடைசி ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தார் . வஹாப் ரியாஸ் வீசிய இறுதி ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டிய இவர் 50 பந்துகளில் 94 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார் . குவெட்டா கிளாடியேட்டர் அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது . இவர் ஆறு சிக்ஸர்களை விளாசிய வீடியோ இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.