“பாகிஸ்தான் ஆஸி அட்வைஸ் இந்தியாவுக்கு தேவையில்லை.. உங்க வேலைய பாருங்க” – கவாஸ்கர் கடுமையான தாக்கு!

0
1383
Gavskar

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பெரும்பாலும் இந்த அணியின் சேர்க்கை என்பது, முடிந்த வரையில் எல்லா தேவைகளையும் யோசித்தே உருவாக்கப்பட்டிருக்கிறது!

மேலும் தற்பொழுது ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கையில் ஒரு பகுதியாக வைத்து நடத்தப்படுகிறது. ஆனால் இலங்கையில் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. இலங்கையில் போட்டி நடைபெறுவதற்கு பிசிசிஐ காரணம் என்று பாகிஸ்தான் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணி குறித்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை பரவலாக தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றியும் நிறைய கருத்துக்கள் வெளி வருகிறது.

இன்னொரு பக்கத்தில் மழையை வைத்து பாகிஸ்தான் அணிகளுடன் விளையாடாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று இந்தியா கணக்கு போடுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் சேர்மன் நஜாம் சேத்தி கூறியிருந்தார். இவை எல்லாம் களத்திற்கு வெளியே நிறைய சூட்டை கிளப்பி இருக்கின்றன.

- Advertisement -

இதுகுறித்து இந்திய கிரிக்கெட்டில் லெஜன்ட் சுனில் கவாஸ்கர் கூறுகையில்
“பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் அறிக்கைகளை எடுத்துக் கொண்டால் துரதிஷ்டவசமாக நம்முடைய ஊடகங்கள் அதற்கு அதிகப்படியானமுக்கியத்துவம் தருகின்றன. எங்களுடைய அணியை பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு எதற்கு கவலை?

இந்திய வீரர்கள் யாராவது சென்று ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்கிறார்களா? அல்லது பாகிஸ்தான் அணியை தேர்வு செய்கிறார்களா? இது அவர்களுடைய விவகாரம் கிடையாது. இருந்தும் நாம் இதை அனுமதித்துக் கொண்டே இருக்கிறோம்.

அங்கிருந்து எப்பொழுதுமே ரோகித் சர்மா விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் ; ஷாகின் அப்ரிடி சிறந்தவர்; சச்சின் டெண்டுல்கரை விட இன்சமாம் உல் ஹக் சிறந்தவர்; அவர்கள் எப்போதும் நம்மை விட சிறந்தவர்கள். அவர்களுடைய பார்வையாளர்களை திருப்தி அடைய வைக்க அவர்களுக்கு இதுதான் வழி.

இந்திய ஊடகங்கள் உங்களுடைய பேப்பர்களில் அவர்களுக்கு இடம் தராதீர்கள். அணியில் யார் இருக்க வேண்டும்? இருக்கக் கூடாது? என்று தென்னாப்பிரிக்க, ஆஸ்திரேலியா நமக்கு கூறுகிறது. நம்முடைய அணியில் மூன்று அல்லது நான்காம் இடங்களில் யார் விளையாட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். இங்கே பாருங்கள்! உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையே கிடையாது!” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்!

- Advertisement -