“பாகிஸ்தான் கூட காய்ச்சல்ல விளையாடினேன்.. பீல்டிங் முத நல்லா பண்ணனும்!” – சர்துல் தாகூர் அதிரடி பேட்டி!

0
110
Shardul

இந்திய அணி தற்பொழுது ஆசியக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக, இரண்டாவது சுற்றுக் கடைசிப் போட்டியில் விளையாடிக் கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் 5 பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

- Advertisement -

ஓய்வு அளிக்கப்பட்ட ஐந்து வீரர்களுக்கு பதிலாக முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாகூர், சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவுக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை ஒரு காரணமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். ஏனென்றால் இந்த தொடரில் இதுவரை இந்திய அணி முதலில் பந்து வீசி இரண்டாவது பேட்டிங் செய்யவில்லை.

இன்று இந்திய அணியின் ஆரம்பகட்ட வேத பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. முகமது ஷமி பங்களாதேஷ் அணியின் அபாயகரமான வீரரான லிட்டன் தாஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பவர் பிளேவில் சர்துல் தாகூர் மிகச் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதற்கு அடுத்து கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் இளம் வீரர் தவ்ஹித் ஹ்ரிடாய் இருவரும் சேர்ந்து பங்களாதேஷ் அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள்.

ஷகிப் அல் ஹசன் 80 ரன்னில் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, பந்து வீச திரும்ப வந்த சர்துல் தாகூர் அவரை அந்த ஓவரின் முதல் பந்திலேயே வெளியேற்றி, இந்திய அணிக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் எட்டு விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்திருக்கிறது. சர்துல் தாகூர் அதிகபட்சமாக 10 ஓவர் வீசி 65 ரன் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

போட்டியின் முதல் பாதி முடிவுக்குப் பின்னால் பேசிய சர்துல் தாகூர் “இந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பாகிஸ்தான் அணி உடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன். காய்ச்சலை சுமந்து கொண்டு என்னால் அந்தப் போட்டியில் முழுதாக நல்ல முறையில் செயல்பட முடியவில்லை. ஆனால் இன்று 10 ஓவர்கள் வீசியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஆடுகளம் மெதுவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எங்கள் தரப்பில் ஃபீல்டிங் நன்றாக இருந்திருந்தால், அவர்களை 220 இல்லை 230 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். ஆடுகளம் மெதுவாக இருந்து எதுவும் நடக்காத பொழுது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். இது கடினமான இலக்குதான். ஓபனிங் பார்ட்னர்ஷிப் கிடைத்தால் ஆட்டத்தை முடிக்க வசதியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!