PAK vs AFG.. ஏபி டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பாபர் அசாம்.. முதல் இடத்தில் விராட் கோலி.!

0
1513

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான அணி தொடரை கைப்பற்றியது .

மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பியார் பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 300 ரன்கள் எடுத்தது .

- Advertisement -

பரபரப்பான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . முதல் ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டம் இழந்த பாபர் அசாம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் எடுத்து ஆட்டம் இழந்தார் . இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 60 ரன்கள் எடுத்திருந்த அவர் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் .

இந்த அரை சதத்தின் மூலம் புதிய சாதனை பட்டியல் ஒன்றில் இடம்பெற்று இருக்கிறார் பாபர் அசாம் . அதாவது கேப்டனாக பொறுப்பேற்ற பின் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் .

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்தியா அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய நட்சத்திர வீரருமான விராட் கிங் கோலி .91 இன்னிங்ஸ்களில் இந்தியாவிற்கு கேப்டனாக ஆடி இருக்கும் விராட் கோலி 5,449 ரன்களுடன் 72.65 சராசரியுடன் முதலிடத்தில் இருக்கிறார் . இதில் 21 சதங்களும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 29 இன்னிங்ஸ்களில் 1880 ரன் களுடன் 69.23 சராசரி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதில் ஏழு சதங்களும் அடங்கும்.

- Advertisement -

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும் 360 டிகிரி வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் 63.94 சராசரி உடன் இருக்கிறார் இவர் 98 இன்னிங்ஸ்களில் தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்து 4796 ரன்கள் எடுத்திருக்கிறார் இதில் 13 சதங்களும் அடங்கும். மேலும் இந்த பட்டியலில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆறாவது இடத்திலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருக்கிறது. அகா சல்மான் நான்கு ரன்கள்டனும் முகமது நவாஸ் இரண்டு ரன்கள்டனும் களத்தில் உள்ளனர்.