எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணியும் பார்ல் ராயல்ஸ் அணியும் மோதி விளையாடின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போலன்ட் பார்க்கில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களமிறங்கிய எம்ஐ அணி தொடக்க ஆட்டக்காரர் வான்டர்டசன் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். மறுமுனையில் அஸ்மதுல்லா 13 ரன், மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் ஹென்றிக்ஸ் நிதானமாக விளையாடி 27 பந்தில் 30 ரன், அதற்குப் பிறகு வந்த இருவரும் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
தொடக்க வீரர் வாடர்டசன் அதிரடியாக விளையாடி 64 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஐந்து பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 91 ரன்கள் குவித்ததால் எம்ஐ அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் முஜீப் அதிகபட்சமாக நான்கு ஓவரில் 27 ரன் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது.
இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரிட்டோரியஸ் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, மற்றொரு தொடக்க வீரர் ரூட் 15 ரன்னில் நடையை கட்டினார். அதற்குப் பின்னர் களம் இறங்கியவர்களில் கேப்டன் மில்லர் 20 பந்தில் மூன்று பவுண்டரியுடன் 24 ரன்கள் குவித்தார். மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் பிரிட்டோரியஸ் அதிரடியாக விளையாடி 52 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 83 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
இதையும் படிங்க:டி20 உலக கோப்பைல சாம்பயன் பிளேயர்.. ஏன் இங்கிலாந்து தொடர்ல அவரை எடுக்கல – ஆகாஷ் சோப்ரா கேள்வி
தினேஷ் கார்த்திக் இறுதியாக ஆறு பந்தில் 10 ரன் எடுக்க ராயல்ஸ் அணி 19 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குறித்து ஆறு பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த தொடக்க வீரர் பிரிட்டோரியஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெட்ரோலியா கேப்பிட்டல் அணிகள் விளையாட உள்ளன.