இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இங்கிலாந்து தொடரில் இடம்பெறாத வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து டி20 தொடர்
இந்திய அணி கடந்த ஜூலை மாதம் டி20 உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி பெருமளவில் கவனத்தை ஈர்த்தனர். இறுதிப் போட்டியில் அக்ஷார் பட்டேல் அதிரடியாக விளையாடி கவனத்தை ஈர்த்தார்.
அதேபோல அந்தத் தொடரில் இடம் பிடித்து பிளேயிங் லெவனிலும் இடம் பிடித்த சிஎஸ்கே மிடில் வரிசை ஆட்டக்காரர் சிவம் துபே தொடக்கத்தில் சிறப்பாக விளையாட விட்டாலும் ஓரிரு போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்கள் உயர அவரும் ஒரு காரணமாக அமைந்தார். கண்டிப்பாக கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இந்திய அணியில் தொடர்ந்து பயணித்தவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் ஏன் இடம்பெறவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அவர் ஒரு சாம்பியன் வீரர் – ஆகாஷ் சோப்ரா
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சிவம் துபேக்கு என்ன ஆச்சு? நான் ஏற்கனவே ருத்ராஜ் பத்தி பேசணும்னு நினைச்சேன். ஆனா அவரால அவருடைய இடத்தை பிடிக்க முடியல. ரஜத் பட்டிதாரும் தனது திறமையை நிரூபித்து காத்திருக்கிறார். இப்படி இந்திய அணிக்கு நிறைய திறமைகள் இருக்கு. ஆனால் நான் இப்போது சிவம் தூபே மீது கவனம் செலுத்தப் போகிறேன். அவர் டி20 உலகக் கோப்பை அணியில் வெற்றி பெற்ற ஒரு வீரர். நீங்கள் வெற்றி பெறும்போது அனைவருக்கும் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும்.
இதையும் படிங்க:அடிச்சு சொல்றேன்.. அவர் மட்டும் இல்லனா.. இந்திய அணி கண்டிப்பா ஜெயிச்சி இருக்கும் – ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி
தொடக்கத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் அவர் இறுதிப் போட்டியில் கண்ணியமாக விளையாடினார். அதற்கு முன்பு அவர் சரியாக பீல்டிங் செய்யவில்லை, பேட்டிங் செய்யவில்லை என்று சில குற்றச்சாட்டுகள் இருந்தன. இருப்பினும் அவர் நன்றாக விளையாடி டி20 உலக கோப்பை சாம்பியன் ஆனார் ” என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.