“பந்தையே ரீட் பண்ண முடியல.. இதுல பாஸ்பால் வேற.. நீங்க குழந்தைங்களா?” – ஓவைஸ் ஷா இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது விமர்சனம்

0
788
Kuldeep

மார்ச்-7. இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒருமுறை ஒரு போட்டியின் கூட இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து நன்றாக விளையாடவில்லை.

இந்த தொடரில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. அந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் மோசமாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒல்லி போப் பேட்டிங்கால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அரைத்ததம் அடித்திருந்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு இந்த தொடரில் இன்னும் பேட்டிங்கில் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ரன் எடுத்த துணை கேப்டன் ஒல்லி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவருமே அரை சதத்தை தொடவில்லை.

மேலும் இந்தத் தொடர் முழுக்க இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான தொடக்கத்தை தந்து கொண்டே வருகிறார்கள். ஆனால் நடுவரிசையில் ஜோ ரூட் இருந்தும் கூட இங்கிலாந்து மிடில் ஆர்டரால் சிறப்பாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. இன்றைய போட்டியிலும் ஒரு விக்கெட் இழப்புக்கு நூறு ரன்கள் எடுத்திருந்து, அங்கிருந்து 218 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆகியது.

இது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் ஓவைஸ் ஷா கூறும் பொழுது “கேப்டன் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். முழு தொடரிலுமே அவர்கள் நல்ல தொடக்கத்தைத்தான் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிடில் ஆர்டர் மீண்டும் ஒருமுறை ஏமாற்றி இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து மிடில் ஆர்டரால் ஏன் சரியாக விளையாட முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மிடில் ஆர்டரில் ஜோ ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் இருக்கிறார்கள். மேலும் மிடில் ஆர்டரில் வரும் ஜானி பேர்ஸ்டோ நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இவர்கள் நல்ல அனுபவம் உள்ளவர்கள் குழந்தைகள் கிடையாது.

ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மீது தொடரை சமன் செய்ய வேண்டிய அழுத்தம் இருந்தது. ஆனால் இன்றைய போட்டியில் அப்படி எந்த அழுத்தமும் கிடையாது. ஆனாலும் கூட இவர்களால் சுதந்திரமாக விளையாடி ரன்கள் எடுக்க முடியவில்லை. மேலும் பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளமாக இருந்தும் கூட இவர்கள் வாய்ப்பை தவற விட்டார்கள்.

இதையும் படிங்க : “அஸ்வின்கிட்ட கத்துக்கோங்க.. விளையாட தெரியாம பாஸ்பால் பின்னாடி ஒளியாதிங்க” – நாசர் ஹுசைன் விமர்சனம்

இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் தன்னிடம் இருக்கும் வேரியேஷன்கள் அனைத்தையும் எப்படி பயன்படுத்தினார்? என்பதை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பார்க்க வேண்டும். இங்கிலாந்தில் நான்கைந்து பேட்ஸ்மேன்களால் அவர் கையில் இருந்து வரும் பந்தை ரீட் செய்யவே முடியவில்லை. உங்களால் பந்துவீச்சாளர் கையில் இருந்து பந்தை ரீட் செய்ய முடியாவிட்டால், எப்படி உங்களால் தாக்கி விளையாட முடியும்?” என்று கூறியிருக்கிறார்.