பார்மில் இல்லாத வீரர்கள் பார்ம்க்கு வர பாகிஸ்தான் சிறந்த அணி – பாகிஸ்தான் அணியை கலாய்த்து இந்திய அணியை பாராட்டிய பாகிஸ்தான் வீரர்!

0
107
Salman butt

இந்திய அணியின் ரன் மெஷின் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய ஆயிரம் நாட்களை நெருங்கி விட்டது. விராட் கோலி மீண்டும் எப்பொழுது தன் பழைய சிறப்பான பேட்டிங் ஃபார்முக்கு வருவார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் வரை ஒரு எதிர்பார்ப்பும் ஒரு விவாதமும் இருக்கிறது.

இந்த ஆண்டில் நான்கு டி20 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி எண்பத்தி ஒரு ரன்களை 20 ரன் சராசரியில் மட்டுமே அடித்திருக்கிறார். 2019 நவம்பர் மாதம் முதல் அவரது பேட்டிங் படிப்படியாக சரிந்து வந்திருக்கிறது. அவர் பேட்டில் இருந்து சதங்கள் எப்பொழுது வரும் என்று காத்திருந்த ரசிகர்கள் பின்பு அரைசதங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள். பின்பு நிலைமை இன்னும் மோசம் அடைந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே மூன்று முறை ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

- Advertisement -

இதையடுத்து ஐபிஎல் தொடருக்கு பின்பு இந்திய உள்நாட்டில் நடந்த சவுத் ஆப்பிரிக்கா அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பிறகு இங்கிலாந்து சென்ற விராட் கோலி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நான்கு இன்னிங்சில் அதிகபட்சமாக 20 ரன்களை தாண்டவில்லை.

இதனால் அவருக்கு ஒரு நீண்ட ஓய்வு வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆகவே அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியிலும் அவர் இடம் பெறவில்லை. ஆசிய கோப்பை தொடருக்கு நேரடியாக விராட் கோலி இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார்.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து சில கருத்துகளை தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும் பொழுது ” திறமையும் அனுபவமும் கொண்ட பேட்ஸ்மேனான விராட் கோலி மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு வருவதை இந்திய அணி பெரிதும் எதிர்பார்க்கும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக பார்மில் இல்லாத வீரர்கள் ஃபார்முக்கு வந்ததை பார்த்து இருக்கிறோம். இப்படி விராட் கோலியும் மீண்டு வந்தால், அது ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பெரிய பிரச்சனையாக அமையும்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எல்லா தொடர்களிலும் ஒரே வீரர்களோடு விளையாடாமல் சுழற்சிமுறையில் விளையாடுவதை இந்திய அணி நடைமுறை ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். இதனால் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்த இளைய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை தருகிறார்கள். தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றும் இந்திய அணியை பாராட்டி உள்ளார்!