என்ன ஆனாலும் இந்த 3 பேரை உலகக்கோப்பை டீம்ல இருந்து தூக்கிறாதீங்க, அதில் விராட் கோலி இல்லை; முன்னாள் கோச் அறிவுரை

0
775

இந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை நிச்சயம் உலகக்கோப்பை செல்லும் இந்திய அணியிலிருந்து தூக்கி விடாதீர்கள் என முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பல கிரிக்கெட் வல்லுனர்கள் உத்தேச அணியை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும், இவர்களுக்கு அணியில் இடம் தேவையில்லை என குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இதுவரை 11 வேகபந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் வீரர்களை பயன்படுத்தி உள்ளனர். அதில் ஓரிருவர் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மேலும் சிலர் பெரிதளவில் சோபிக்கவில்லை.

இருப்பினும் முன்னாள் கோச் ஸ்ரீதர், இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், முகமது சமி மற்றும் ஜஸ்ட்பிரித் பும்ரா ஆகிய மூவரும் இடம்பெற்றால் போதும் இளம் வீரர்களை இவர்களுக்கு மாற்று வீரர்களாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டால் சரியானதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“புவனேஸ்வர் குமார் மற்றும முகமது சமி இருவரும் புதிய பந்து மற்றும் டெத் ஓவர்களில் மிகச்சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். பும்ராவும் டெத் ஓவர்களில் அருமையாக வீசுவார். ஆனால் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவதற்கு இவர்கள் மூவரில் பும்ரா மட்டுமே சரியான வீரராக இருப்பார் என நான் நினைக்கிறேன். ஆகையால் பும்ராவை மிடில் ஓவர்களில் பயன்படுத்த வேண்டும்.

சமியை இந்திய டி20 அணியில் விளையாட வைக்க வேண்டும். ஆஸ்திரேலியா மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் சமி மிகச்சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அந்த அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். ஆஸ்திரேலியா மைதானம் வேகபந்துவீச்சிற்கு சாதகமாக இருப்பதால் கூடுதல் பந்துவீச்சு வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அணியில் இருக்கிறார். ஆகையால் மொத்தம் நான்கு வேகபந்துவீச்சாளர்கள் இப்போது கிடைத்து விட்டார்கள். ஓரிரு சுழல் பந்துவீச்சாளர்களை மட்டும் அணியில் பயன்படுத்தினால் போதுமானது. அதிலும் குறிப்பாக அவர்கள் ஆல்ரவுண்டராக இருந்தால் கூடுதல் பலம்.” என டி20 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “சமி மற்றும் பும்ரா இருவருக்கும் உடல் நிலையில் நல்ல கவனம் தேவை. ஆனால் புவனேஸ்வர் குமார் சமிபகாலமாக டி20 தொடரில் விளையாடி வருகிறார். ஆகையால் அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் நான்கு கவனத்துடன் பார்த்துக் கொண்டால் போதும்.” என்றும் குறிப்பிட்டார்.