“எங்கள் தரப்பு பீதி அடைந்ததை நான் பார்த்தேன்!” – ரோகித் சர்மா பேச்சு!

0
3017
Rohit sharma

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் தொடர்ந்து நீடித்திருக்க, இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயும் தற்பொழுது நடந்து வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி மிகவும் முக்கியம் வாய்ந்தது!

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளையும் தோற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போவதற்கும் ஒரு சிறு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இப்படியான நிலையில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிக அபாரமாக செயல்பட்டு வென்று தொடரில் தற்போது பலமான முன்னிலையை பெற்றுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருந்தது. ஆனால் மூன்றாவது நாள் காலையில் ஆஸ்திரேலியா அணி யாரும் எதிர்பாராத விதமாக 48 ரண்களுக்கு 9 விக்கட்டுகளை இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா அணியின் வெற்றி மிக எளிதாகி போனது.

இரண்டாவது நாள் ஆட்ட முடிவின்போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து துரிதமாக விளையாடி 61 ரன்களை 12 ஓவர்களில் எடுத்திருந்தது. அன்றைய நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணியின் கை இந்த காரணத்தால் அதிகபட்சம் போட்டியில் ஓங்கி இருந்தது. இது இந்திய அணி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ” சில நேரங்களில் நாம் திட்டங்களை எளிமையாக வைத்திருக்க வேண்டும். மேலும் என்ன நடக்கிறது என்று தேவையில்லாமல் அதிகமாக சிந்தித்து சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. நேற்று அவர்கள் 12 ஓவர்களில் 61 ரன்கள் ஓவருக்கு ஐந்து ரன்கள் வீதம் எடுத்திருந்தார்கள். இதனால் எங்கள் தரப்பு கொஞ்சம் பீதி அடைந்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் அடிக்கடி பீல்டிங் வியூகத்தை மாற்றினார்கள்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” காலையில் நான் எங்களது மூன்று சுழப்பந்துவீச்சாளர்களிடமும் அமைதியாக இருக்கச் சொல்ல விரும்பினேன். நேற்று மாலை செய்தது போல் அடிக்கடி பீல்டிங்கை மாற்ற வேண்டாம் என்று சொல்ல விரும்பினேன். தொடர்ந்து ஒரே மாதிரி இருந்து அவர்களை இறுக்கத்தில் வைத்து, அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். நான் நினைத்தது போலவே எங்களது சுழற் பந்துவீச்சாளர்களும் நினைத்தார்கள். அவர்கள் அப்படியே ஆக்ரோஷமாக செயல்பட விரும்பினார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த ஆடுகளத்தில் நீங்கள் மிக அதிரடியாக வெளியேறி விளையாட முடியாது என்று உணர வேண்டும்” என்று ரோகித் சர்மா கூறி முடித்திருக்கிறார்!