“எங்க ரன் ரேட் ஏறிக்கிச்சு.. எங்களாலும் செமி பைனலுக்குள்ள வர முடியும்!” – இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் அதிரடி பேட்டி!

0
693
Mendis

இன்று உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

மிகக் குறிப்பாக இங்கிலாந்து அணியை 156 ரன்களுக்கு சுருட்டி, அந்த இலக்கை 25.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து எட்டி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் ரன் ரேட் மிகவும் அடி வாங்கி இருக்கிறது. அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது. மேலும் அரையிறுதி வாய்ப்பு 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது.

அதே சமயத்தில் இலங்கை அணிக்கான அரையிறுதி வாய்ப்பு இன்னும் முடிந்து விடவில்லை. அவர்களுக்கு இருக்கும் நான்கு ஆட்டங்களில் நான்கையும் வெல்ல முடிந்தால் அரையிறுதியில் அவர்களாலும் இருக்க முடியும்.

இன்றைய போட்டியில் பேட்டிங் செய்ய சாதகமான பெங்களூர் ஆடுகளத்தில், சிறிய மைதானத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் அபாரமான முறையில் இருந்தது. அவர்கள் இன்று மொத்தமாக உலகத் தரத்தில் செயல்பட்டார்கள்.

- Advertisement -

போட்டியில் வெற்றிக்குப் பின் பேசிய இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ் கூறும் பொழுது “எங்களுக்கு ரன் ரேட் உயர்ந்து கொண்டே வருகிறது. நாங்கள் முதல் சில ஓவர்களில் நன்றாகத் தொடங்கினோம். பின்பு நாங்கள் அதையே தொடர செய்தோம்.

எங்களுக்கு இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. நாங்கள் அந்த ஆட்டங்களுக்கு இதையே எடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறோம். எங்களாலும் அரைஇறுதிக்கு வர முடியும்.

லகிரு குமாராவுக்கு அவரது பங்கு அணியில் என்னவென்று தெரியும். அவர் எங்களின் முக்கிய வேகப்பந்து வீச்சு ஆயுதம். இன்று அவர் ஆட்டத்தை கட்டுப்படுத்த மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.

ஏஞ்சலோ மேத்யூஸ் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்.அவர் பேட்டி மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை தரக்கூடியவர். மிடில் ஓவர்களில் அவர் எங்களுக்கு நல்ல கட்டுப்பாட்டை கொடுத்தார். அவர் விளையாட்டை ரசித்து விளையாடுகிறார். சூழ்நிலைகளை எப்படி கையாள்வது? என்று அவருக்குத் தெரியும். எனவே அவரோடு இருப்பது நல்ல விஷயம்.

இன்று எங்களுடைய ஃபீல்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் அடுத்து வரக்கூடிய போட்டிகளுக்கு இன்று செய்ததை அப்படியே எடுத்துச் செல்ல வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!