“மற்றவர்களுக்கு உரிமை இல்லை தோனி தான் முடிவெடுக்க வேண்டும்” – முரளி விஜய் பரபரப்பு பேட்டி!

0
922

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பதினாறாவது ஐபிஎல் சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 24 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 25 ஆவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் ஜெய்ப்பூரில் மோத இருக்கின்றன.

திங்கள்கிழமை நடைபெற்ற 23 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் சென்னை அணியின் அபார பேட்டிங் மற்றும் எம்எஸ் தோனியின் திறமையான கேப்டன்ஷிப் காரணமாக வெற்றி பெற்றது.

- Advertisement -

நாளை மறுநாள் நடைபெற இருக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய முனைப்பில் சென்னை அணி செயல்படும் என்பது பெங்களூரு அணியுடன் ஆன அவர்களது ஆட்டத்தின் அணுகுமுறையின்போதே தெரிந்தது.

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே எம் எஸ் தோனி இந்தத் தொடரோடு ஓய்வு பெற்று விடுவார் என்ற ஒரு கருத்து மற்றும் கணிப்பு பரவலாக நிலவி வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் விமர்சகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அதே கருத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக எம் எஸ் தோனி உடன் முன்னாள் கிரிக்கெட் விளையாடிய வீரர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் இதே கேள்வியை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரருமானமுரளி விஜய் எம் எஸ் தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள அவர் ” நிறைய பேர் எம் எஸ் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற்று விடுவாரா என்று கேட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ஒரே அணிக்காக கேப்டனாக இருந்து விளையாடி வருபவர் எம் எஸ் தோனி. என்னை கேட்டால் அவரது விருப்பத்திற்கே ஓய்வு விட்டு விட வேண்டும் என்று நான் கூறுவேன் என தெரிவித்துள்ளார். ஒரு அணிக்காக 15 வருடங்களாக அனேகமாக எல்லா போட்டிகளிலும் ஆடியுள்ள வீரர் அவர். அதற்கு சிறந்த வகையில் மதிப்பளிப்பது என்பது அவரது ஓய்வை அவரிடமே விட்டுவிட வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்தார் முரளி விஜய்.